Sunday, March 15, 2020

கொந்தகையில்_அகழாய்வு: ஒரே குழியில் 8 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு.

#கொந்தகையில்_அகழாய்வு: ஒரே குழியில் 8 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு.

-தினமணி (14-3-2020)

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே  கொந்தகையில் தொடங்கப்பட்டுள்ள அகழாய்வில், ஒரே குழியில் 8 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியின் நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்தது. அதைத் தொடார்ந்து, திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 6-ஆம்  கட்ட அகழாய்வுக்காக ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது.

கீழடியில் நீதியம்மாள் என்பவார் நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இக்குழியிலிருந்து 2 செங்கல்சுவார்கள்கண்டுபிடிக்கப்
பட்டன. தொடாரந்து, அருகிலேயே மண்பானை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

தற்போது, கொந்தகையில் பழமையான ஈமக்காட்டில் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, 2 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதில், ஒரே குழியில் 8 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அருகிலேயே 5 மண்பானைகள், 3 மண் குடுவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அகரத்தில் 2 ஏக்கர் அரசு நிலத்தில் அகழாய்வுப் பணிக்காக சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில் மணலூரிலும் அகழாய்வுப் பணி தொடங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா?

  இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா? இளையவர்கள் கையில் கட்சி என்பதுபோன்ற தோற்றத்தை திமுகவில் ...