Thursday, March 19, 2020

#கிராமப்புறங்களில்_மாட்டுவண்டி , #ரேக்ளாவண்டி_வில்வண்டி #பீப்பாய்வண்டி _தட்டுவண்டி

#கிராமப்புறங்களில்_மாட்டுவண்டி ,
#ரேக்ளாவண்டி_வில்வண்டி #பீப்பாய்வண்டி _தட்டுவண்டி 
————————————————-
கிராமப்புறங்களில் பேருந்து வசதி இல்லாத அக்காலத்தில் வெளியூர் செல்வதற்கும் ,சந்தைக்கு செல்வதற்கும் ,உறவினர் ஊர்களுக்கு செல்வதற்கும் ,விவசாய பயன்பாட்டிற்கும் மாட்டு வண்டிகளை பயன்படுத்தினர் .அவ்வகையில் மாட்டுவண்டி ,ரேக்ளாவண்டி ,வில்வண்டி ,பீப்பாய்வண்டி ,தட்டுவண்டி  என பல்வேறு பெயர்கள் உண்டு .மாட்டுவண்டி விவசாய பயன்பாட்டிற்கும் ,ரேக்ளாவண்டி பந்தயத்திற்கு ம் ,வில்வண்டி சொகுசு பயணத்திற்கும் ,பீப்பாய்வண்டி தண்ணீர்கொண்டுவருவதற்கும் ,தட்டுவண்டி என்பது இளம்காளைகளை பழக்குவதற்கும் பயன்படுத்தினர் .இவ்வண்டிகள் காலப்போக்கில் இயந்திரமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தில் மறைந்துவிட்டன ..அக்காலத்தில் வண்டிகள் தயாரிப்பில் கயத்தாறு ,நாகலாபுரம் புகழ் பெற்றதாகும் .அதேபோல் ரேக்ளாவண்டி தயாரிப்பில் நாகலாபுரம் தச்சுப்பட்டறை சிறந்ததாகும் .ரேக்ளாவண்டி  பந்தயத்தில் பயன்படுத்தப்படும் மாடுகளை  விவசயாத்திற்கு  பயன்படுத்தமாட்டார்கள் ..கோவில்கொடை விழாக்கள் ,முக்கிய தினங்கள் ,தலைவர்கள் பிறந்தநாள் ஆகியவற்றில் ரேக்ளாபந்தயம் நடைபெறும் .



No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".