#தூக்கு_தண்டனை
——————————
நிர்பயா குற்றவாளிகள் இன்று அதி
காலையில் தூக்கிலிப்பட்டுவிட்டனர். இந்தக் குற்றவாளிகள் செய்த படுபாதகச் செயலால் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஆர்வலர்களின் பணிக்கு சிக்கலைத்தான் உருவாக்கி
விட்டிருக்கிறது. இந்தக் கேடுகெட்ட மனிதப் பிறவிகளால் நல்ல நோக்கங்கள் கூட பாழ்படுகின்றன என்பதுதான் வேதனையான விடயம். மரன தண்டனை கூடாது என்று 1984லேயே வழக்கு தொடுத்து ஒரு கைதியின் தூக்கு கயிறை அறுத்தவன் என்ற தகுதி மட்டுமல்லாமல் சர்வதேச, இந்திய அளவில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரவுகளையும் நிகழ்வுகளையும் குறிப்பிட்டு விரிவான நூலை எழுதியவன் என்ற நிலையில் இந்தக் கொடிய நிர்பயா சம்பவத்தால் வேதனைகள் மனதில் உருவாகின்றது. இருப்பினும் இந்தப் பணிகளை தொடரவேண்டியதுதான்.
https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2015/07/blog-post_30.html
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
20.03.2020.
#ksrpost
#தூக்கு_தண்டனை
#நிர்பயா_வழக்கு
No comments:
Post a Comment