*ஆண்டுக்கு_லஞ்சம்_மட்டும்_48,000 #கோடி *
லாரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும், போக்குவரத்துக்காவலர்கள் மற்றும்
நெடுஞ்சாலைத்துறைக் காவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.48,000 கோடியை லஞ்சமாக அளிக்கிறார்களாம். “சேவ்லைப்” என்ற அறக்கட்டளை, நாடு முழுவதும் சுமார் 1,200 லாரி ஓட்டுநர்கள் மற்றும் 110 லாரி உரிமையாளர்களிடம் நடத்திய ஆய்வில், 82 சதவீதம் பேர் சாலைப் பயணத்தின் போது லஞ்சம் கொடுப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.அதாவது, ஒரு லாரி ஓட்டுநர் தனது ஒரு பயணத்துக்கு மட்டும் சராசரியாக ரூ.1,257ஐ லஞ்சமாக அளிக்கிறார். தில்லியில் மட்டும் சுமார் 84 சதம் லாரி ஓட்டுநர்கள் போக்குவரத்துஅல்லதுநெடுஞ்சாலைத்துறைக் காவலர்களுக்கு லஞ்சம் அளிப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதில்கவுகாத்தியில்தான்அதிகபட்சமாக 97.5 சதம் ஓட்டுநர்கள் லஞ்சம் கொடுப்பது தெரியவந்துள்ளது. இது சென்னையில் 89 சதமாக உள்ளது. அது மட்டுமல்ல, சில பகுதிகளில், ஒரு போக்குவரத்துக் காவலருக்கு லஞ்சம் கொடுத்தால் போதும், அவர் ஒரு சிறப்பு துண்டுச் சீட்டைக் கொடுப்பார். அதை லாரி ஓட்டுநர் வழி நெடுகிலும் காட்டிவிட்டு எளிதாக தனது பயணத்தை மேற்கொள்ளவும் சிறப்பு வசதிகளைச் செய்துகொடுக்கிறார்களாம். ஓட்டுநர்களிடம் கேட்கப்பட்ட இது தவிர்த்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்துள்ள பதிலில், பெரும்பாலான ஓட்டுநர்கள் இந்த வேலயை தங்கள் உறவினர்களுக்குப் பரிந்துரைக்க மாட்டார்கள் என்றும், 50 சதம் லாரி ஓட்டுநர்கள் தூக்கக் கலக்கத்திலும் மயக்க நிலையிலும் கூட வாகனத்தை இயக்குவதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
-நன்றி: காவிரிக்கதிர் (மார்ச் 2020)
No comments:
Post a Comment