Sunday, March 22, 2020

கரிசக்காட்டு_விவசாயின்_வேதனைக் #குரல்

#கரிசக்காட்டு_விவசாயின்_வேதனைக் #குரல்
————————————————
#வெள்ளாமை வீட்டுக்கு வந்து மாசக் கணக்குல ஆச்சு.வெலவாசி நாளுக்குநாள் பாதாளத்துக்கு போயிருச்சு. சம்சாரி பாடு ஊமையன் கனவு போல ஆயிருச்சு. போன வருஷம் வித்த வெல கூட இந்த வருஷம் இல்ல. காடு நெறையா பருத்தி வெடிச்சி கெடக்கு எடுக்க மனசு வரல, ஏற்கனவே வீட்டுல குண்டாலு கணக்குல இருப்பு இருக்கு,கோழித் தீவணம், மாட்டுத் தீவணம் திண்பண்டங்க தயாரிக்க மக்காச்சோளம் , வெள்ளைச் சோளம், கம்பரிசி, கொத்தமல்லி, ஆயிரக்கணக்கான டன் வியாபாரிக எங்க கிட்ட கொள்முதல் செய்வாக .இதுல வேற கொரானா காய்ச்சல், பறவை காய்ச்சல் புதுசு புதுசா நோக்காடு வருதுன்னு சொல்லி நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு கறிக்கோழி பண்ணைகளஇழுத்து மூடிட்டாக, எந்தப் புண்ணியவாளன் பார்த்த பார்வையோ? மண்ணுல வெளஞ்சது மண்ணுக்கே உரமா போயிரும் போல. எந்த வெள்ளாமையும் வெல வச்சு கேட்க நாதியில்ல? நாடாளும் மகராசாக்களே  மோடி ஐயா பயிர் இன்சூரன்ஸ் எல்லாம் பரவாயில்லாம கொடுத்தீக அதே மாதிரி நெல்லு, கரும்பு, கோதுமைக்கு கொறஞ்சபட்ச ஆதார விலை நிர்ணயம் செஞ்ச மாதிரி எங்க சிறுதானியங்களுக்கும், பயறு பச்சகளுக்கும் கொறஞ்ச பட்ச ஆதார விலையை செய்யுங்க .சம்சாரிகஸ்டம் சக சம்சாரிக்குதான் தெரியுமுன்னு சொல்லுவாக அதனாலதான் எங்க சம்சாரி மொதலமைச்சர் மாணமிகு சிலுவம்பாளையம் பழனிச்சாமி ஐயா எங்கள கொஞ்சம் ஏறிட்டு பாருங்க , கட்டுபடியாகுற வெலயகொடுங்க ஒங்கள மல போல சம்சாரிக நம்பியிருக்காக ஐயா? சம்சாரிக கஸ்டப்பட்டா பறவைக, பூச்சிக, கோடிக்கணக்கான உயிருக கண்ணீர் விடும் ஐயா அதுக்கு நாங்க உணவு போடுறோம்













No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...