#கரோனா
#பொறுப்பான_அரசியல்வாதிகளும், #ஐஏஎஸ்_அரசு_அதிகாரிகளுமேஇப்படி #இருந்தால்_பாமர_மக்களை_சொல்ல #முடியும்.
———————————————-
கேரளாவில் முக்கியமான காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தும் வடக்கே காசர்கோடில் இருந்து திருவனந்தபுரம் வரை நண்பர்களோடு பயணித்துள்ளார். அதுமட்டுமல்லாதுகேரளாஅமைச்சர்கள், சட்டமன்றஉறுப்பினர்கள்ஆகியோரையும் சந்தித்துள்ளார். கிட்டத்தட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களை சந்தித்ததோடு இரண்டு பிரார்த்தனை கூட்டங்களில் கலந்துக் கொண்டு, காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கும் சென்றுள்ளார். இதுவரை அவருடன் தொடர்பு ஏற்பட்ட 260 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதே போல கொல்லம் மாவட்ட உதவி கலெக்டராக இருக்கும் அனுபம் மிஷ்ராவுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்திருக்கிறது. அதை தொடர்ந்து விடுப்பில் சென்றவர் பிப்ரவரி மாதம் மனைவியுடன் தேன்நிலவுக்கும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பியவரை அரசு 14 நாள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கச் சொல்லி அறிவுறுத்த, அதை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் அவர் தப்பி சென்றிருக்கிறார். கொல்லம் கலெக்டர் இது பற்றிய செய்தி அறிந்து அவரைத் தொடர்புக் கொண்ட போது அவர் பெங்களூருவுக்கு சென்றுக் கொண்டிருப்பதாக தகவல் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் பெங்களூரு செல்லாமல் தன் சொந்த ஊரான கான்பூர் சென்றிருப்பதாக தகவல்கள் வருகின்றன. பொறுப்பான இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும், மெத்தப் படித்த ஐஏஎஸ் அரசு அதிகாரிகளுமே இப்படி இருந்தால் பாமர மக்களை நாம் என்ன சொல்ல முடியும்.
கரோனா வைரஸ் என்பதை குறித்து ஓரளவு விழிப்புணர்வுடனும் கவனத்துடன் இருக்கின்றோம், மறுக்கவில்லை. ஆனால் இதன் அடிப்படை காரணமே இத்தனை பெரிய மக்கள் தொகை இருந்தும் நாம் கட்டுப்பாடுடன் இருக்கின்றோம். பெரிதும் பாதிக்கப்பட்ட சில நாடுகள் மக்கள் தொகை நம்மை விட குறைவாக இருந்தாலும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பொருளாதாரத்திலும் நமக்கு சரிவு இருக்கின்றது. மற்ற நாடுகளைக் காட்டிலும் நமக்கு பெரிய சவாலாக இருக்கும் மக்கள் தொகை அதிகரிப்பால் மக்களுக்கு தேவையான திட்டங்களை சரியாக வகுக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 1960களில் இருந்து மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து பேசிக் கொண்டிருந்தாலும் இன்னமும் மக்களை அது சரியாக சென்றடையவில்லை. மக்களும் ஒரு வீட்டிற்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால் போதும் என்ற பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க கூடிய அளவில் அரசுகள் செய்தாலும் செய்யாவிட்டாலும் நோயாயினும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆயினும் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வது நமக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.
#கரோனா_வைரஸ்
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.03.2020
#ksrposts
No comments:
Post a Comment