Thursday, March 19, 2020

#அரசியல்_நிர்ணய_சபை_குறித்து #சில_அறியாச்_செய்திகள்: #Constituent_Assembly

#அரசியல்_நிர்ணய_சபை_குறித்து 
#சில_அறியாச்_செய்திகள்:
#Constituent_Assembly————————————————
இந்தியாவின் அரசியல் சட்டம் எழுதப்பட்ட சமயத்தில் இரண்டு அவைகள் இது குறித்து இயங்கின. மற்றும் அம்பேத்கர் தலைமையில் வரைவுக் குழுவும் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் நிர்ணய மன்றம், பட்டாபி சீதாராமையா தலைமையில் இயங்கியது. அரசியம் நிர்ணய மன்ற காங்கிரஸ் கட்சி ஓர் அமைப்பாகவே செயல்பட்டது. இதைக் குறித்து எல்,கிருஷ்ணசாமி பாரதி அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார் (இவர் நாவலர் சோமசுந்தர பாரதியின் மருமகனும் ஆவார். நெல்லை மாவட்டம் இடைகாலில்வழ்ந்திருந்தார். பல தடவை அவர் வீட்டுக்குச் சென்றுள்ளேன். சென்னைக்கு வந்தால் என்னுடைய இல்லத்துக்கும் வருவார். என் மனைவியை ‘என்ன குழந்தாய்’ என்று அன்போடு அழைப்பார்.):
”அரசியல் நிர்ணய மன்ற காங்கிரசுக் கட்சி
விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி, விடுதலைக்கு வழிவகுத்த இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் ஆதரவிலேயே நாங்கள் பெரும்பான்மையினர் அரசியல் மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். எனவே, அரசியல் நிர்ணய மன்ற ‘காங்கிரசுக் கட்சி’ என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியல் சட்டத்தை வகுத்ததில் பெரிய பங்கு இந்தக் கட்சியினையே சேரும். இந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர் பட்டாபி சீதாராமய்யா என்பவராவார்.



அரசியல் நிர்ணய மன்றம்
”அரசியல் நிர்ணய மன்ற சபைக்கு இராசேந்திர பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் சட்டப் பிரிவுகளை உருவாக்கிட, அம்பேத்கரைத் தலைவராகக் கொண்ட குழு (Drafting Committee) ஒன்று நியமிக்கப்பட்டது. அக்குழு சட்டப் பிரிவுகளை வரைந்தது. அரசியல் நிர்ணய மன்றத்தில் முன்னிலைப்படுத்தும் முன்னர், அப்பிரிவுகள் ஒவ்வொன்றும் பரிசீலனைக்காகவும், ஒப்புதலுக்காகவும் அம்பேத்கர் எங்கள் கட்சிக் கூட்டத்தில் முன்னிலைப்படுத்துவார். அவற்றை விவாதித்து உரிய திருத்தங்கள் செய்வோம். நாங்கள் இறுதியாக முடிவு செய்த வடிவத்திலே அரசியல் நிர்ணய மன்றத்தில், அம்பேத்கரால் முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்டு, அரசியல் சட்டத்தில் இடம்பெறுவதாகும்.
எனவே, எங்கள் கட்சிக் கூட்டத்தின் முடிவுகளுக்குச் சிறந்த முக்கியத்துவம் உண்டு. இந்தப் பின்னணி பலருக்கும் தெரியாதிருக்குமாதலால் ஈண்டு இந்த நடைமுறை பற்றி எடுத்துரைக்கலானேன். எனவே, எங்கள் கட்சிக் கூட்டங்களில் நடைபெற நிகழ்ச்சிகள் சிலவற்றை எடுத்துரைக்க வேண்டியது அவசியமாகிறது.”
இத்தோடு நான் அறிந்த சில செய்திகள்
“அரசியல் சாசனத்தில் தமிழில் வீரபாகு என்பவர் கையொப்பமிட்டார். கோவை டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், ’இந்தியாவில் மொழி ஆதிக்கம் கூடாது. தமிழர்கள் மீது எந்த மொழியையும் திணிக்கக் கூடாது’ என வலியுறுத்தினார். காங்கிரஸ் உறுப்பினரான ராமலிங்கம் செட்டியாரின் பேச்சு அப்போது பெரிய அதிர்வை ஏற்படுத்தியது, மேலும் அவர் தெற்கே இருந்து வந்த நாங்கள் டெல்லியில் அந்நியர்களாகவே உணர்கிறோம் என்றார். வேதனையையும் வெளிப்படுத்தினார். இவருடைய பேச்சை திருவாங்கூர் கொச்சியைச் சேர்ந்த பி.டி.சாக்கோ, மைசூர் கிருஷ்ணமூர்த்தி ரவ் ஆகியோர் ஆதரித்துப் பேசினர். இதன்பின் பேச வந்த அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத், தமிழையும் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய அரசியல் யாப்பு வரையறை அவையில் அன்றைக்கு இவர்கள் மட்டுமே தமிழையும், மொழி ஆதிக்கம் கூடாது என்பதையும் வலியுறுத்தியவர்கள் ஆவார்கள்.
அது மட்டுமல்லாமல், கடந்த 1962 ஜனவரி 31இல் பெங்களூரில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் காமராஜ் தலைமையில் நடைபெற்றபோது அன்றைய கர்நாடக முதலமைச்சர் எஸ்.நிஜலிங்கப்பா, அன்றைய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதுல்யா கோஷ், ஆந்திர காங்கிரஸ் தலைவரும் பின்னாள் இந்தியக் குடியரசுத்தலைவருமான நீலம் சஞ்ச்சிவ ரட்டி ஆகியோரின் கூட்டறிக்கையிலும், இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்க வேண்டாம் என்று கூறியிருந்தனர்.   திரும்பவும் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தபோது அதே 1965 ஜூன் மாதத்தில் அன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் புது டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இரண்டு நாட்கள் விவாதித்து, மொழித் திணிப்பு கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

#அரசியல்_நிர்ணய_சபை 
#சில_அறியாச்_செய்திகள்
#Constituent_Assembly

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-03-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings

……………………………………………………………

A constituent assembly or constitutional assembly is a body or assembly of popularly elected representatives which is assembled for the purpose of drafting or adopting a constitution or similar document. The constituent assembly is entirely elected by popular vote[citation needed]; that is, all constituent assemblies are constitutional conventions, but a constitutional convention is not necessarily a constituent assembly. As the fundamental document constituting a state, a constitution cannot normally be modified or amended by the state's normal legislative procedures[citation needed]; instead a constitutional convention or a constituent assembly, the rules for which are normally laid down in the constitution, must be set up. A constituent assembly is usually set up for its specific purpose, which it carries out in a relatively short time, after which the assembly is dissolved. A constituent assembly is a form of representative democracy.

Unlike forms of constitution-making in which a constitution is unilaterally imposed by a sovereign lawmaker, the constituent assembly creates a constitution through "internally imposed" actions, in that members of the constituent assembly are themselves citizens, but not necessarily the rulers, of the country for which they are creating a constitution.As described by Columbia University Social Sciences Professor Jon Elster:

Constitutions arise in a number of different ways. At the non-democratic extreme of the spectrum, we may imagine a sovereign lawgiver laying down the constitution for all later generations. At the democratic extreme, we may imagine a constituent assembly elected by universal suffrage for the sole task of writing a new constitution. And there are all sorts of intermediate arrangements.

No comments:

Post a Comment

இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா?

  இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா? இளையவர்கள் கையில் கட்சி என்பதுபோன்ற தோற்றத்தை திமுகவில் ...