Tuesday, March 24, 2020

#இத்தாலியைஅணைக்கும்_கியூபாவின் #கருணைக்_கரங்கள். #ஆனால்_ஈழ_இறுதிப்_போரின்_போது...



———————————————
இத்தலியில் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டதற்கு கியூபா மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டியது வரலாற்றில் ஒரு தவமாகும். இது பாராட்டுக்கு மட்டுமல்ல படிப்பினையும் கூட. பாதிப்பு எங்கு ஏற்பட்டாலும் உதவிக்கரம் என்பது அவசரம் அவசியமானது. 

ஆனால் கியூபா ஈழத்தமிழர் பிரச்சினையில் ஏன் அப்படி நடந்துக் கொண்டது என்பது புரியாத வினாவாக கடந்த எட்டாண்டுகளாக விடை காணாமல் உள்ளது. 

இலங்கையில் 2009ல் இறுதிப் போரில் இந்தியாவின் உதவியோடு ராஜபக்சே சிங்கள அரசு தமிழினத்தை அழித்த கொடூரம் இன்னும் நம் மனதில் இருந்து அகலாத துயரங்கள் ஆகும். இதைக் குறித்து ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் சர்வதேச சுதந்திரமான நம்பகமான புலனாய்வும், விசாரணையும் வேண்டுமென்று பிற நாடுகள் முன்னெடுத்த போது, கம்யூனிச சித்தாந்தத்தை முன்னெடுத்த கியூபா, ரஷ்யா, சீனா சிங்கள ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக ஏன் இருந்தார்கள் என்பது இதுவரை புரியாத புதிராகவும் இருக்கின்றது.

கம்யூனிசம் உலகவாதமும் உலக நலன்களையும் முன்னெடுப்பதாகும். சாதாரண மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாத கம்யூனிச கொள்கைகளை வகைப்படுத்திய கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ போன்ற தலைவர்கள் இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக நிச்சயமா குரல் கொடுத்திருப்பார்கள். தற்போது communist block என்று சொல்லக் கூடிய ரஷ்யா, சீனா, கியூபா தமிழர்களுடைய நியாயங்களுக்கு துணையில்லாமல் இருந்தது வேதனை தருகின்ற விடயமாகும். இவையெல்லாம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த சங்கதி ஆகும்.

இந்த காலக்கட்டத்தில் இவ்வளவு உதவிக் கரம் நீட்டும் கியூபா ஒன்றரை லட்சத்திற்கும் மேல் தமிழர்கள் அழிக்கப்பட்ட போது ஏன் மெளனம் சாதித்தார்கள் என்பது தான் பார்வையாளராக நடுநிலையோடு செய்யவேண்டிய பதிவும் கூட.

#கியூபா
#இத்தாலி
#ஈழத்தமிழர்
#முள்ளிவாய்க்கால்
#ஜெனிவா
#ksrpost

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2020

No comments:

Post a Comment

இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா?

  இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா? இளையவர்கள் கையில் கட்சி என்பதுபோன்ற தோற்றத்தை திமுகவில் ...