Tuesday, March 17, 2020

ரஷ்யா_அதிபராக_புடின்_நீடிக்க_சட்ட #திருத்தம்

#ரஷ்யா_அதிபராக_புடின்_நீடிக்க_சட்ட #திருத்தம் 
————————————————-
ரஷ்யா அதிபராக புடின் நீடிக்க சட்ட திருத்தம் கம்யூனிஸ்ட் நாடாக இருந்த ரஷ்யா உடைந்து பல நாடுகளாகச் சிதறியது. அது முதல் ரஷ்யா ஜனநாயகப் பாதையில்செல்வதாகக்கூறிக்
கொள்கிறது. இப்போது ரஷ்ய அதிபராக இருப்பவர் விளாடிமிர் புடின். இவர் 2008ஆம் ஆண்டு வரை இரண்டு முறை தொடர்ந்து அதிபராகப் பதவி வகித்தார்.
அதன் பின் 2012இல் மீண்டும் அதிபரானார். பிறகு 2008 தேர்தலிலும் வெற்றி பெற்று இப்போதும் அதிபராகத் தொடர்கிறார்.
ரஷ்ய நாட்டு அரசியல் சாசனப்படி ஒருவர் தொடர்ந்து இரு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். அதன்படி புடினின் இப்போதைய பதவிக் காலம் முடிந்த பின் அவர் மீண்டும் அதிபராக முடியாது. எனவே தான் அதிபராக நீடிக்க என்ன வழி என்று ஆராய்ந்தார்.
அப்படி ஆராய்ந்து அரசியல் சாசனத்தைத் திருத்தும் முடிவுக்கு வந்தார். அதிபர் பதவிக்கான கால வரம்பைத் தளர்த்துவதுதான் அந்த முடிவு. டுமா என்று அழைக்கப்படும் ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புடினுக்குப் பெரும்பான்மை இருந்ததால், அதிபர் பதவிக்கான கால வரம்பைத் தளர்த்தும் மசோதா நிறைவேறியது. அதன்படி 2036ஆம் ஆண்டு வரை அதாவது புடினின் 83ஆவது வயது வரை அவர் அதிபராகத் தொடர முடியும்.
83 வயது என்பது ஓய்ந்திருக்க வேண்டிய வயது. ஆனால் புடின் அதுவரை பதவியை விரும்புவது எப்படி ஜனநாயக மனப்பாங்காக இருக்க முடியும்?

#ரஷ்யா_அதிபர்_புடின்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
17-03-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...