Monday, March 23, 2020

கித்தாய்ப்பாக ஒரு பார்வை பார்ப்பார் இந்த உலகத்தை” -#கிரா|லீலை, 2016: 74.

”அவர் கருப்பு வெத்திலைப் பிரியர். இந்தப் புகையிலை போடுகிறவர்கள் பெரும்பாலும் கருப்பு வெற்றிலைதான் வேணும் என்பார்கள். காரணம், போடுகிற புகையிலைக்கு ‘ஆசு’வாக நிக்கணுமாம். வெள்ளை வெற்றிலை என்றால் தண்ணீராய்க் கரைந்துவிடுமே என்பார்கள்.
சாப்பிட்டவுடன் ஒரு வெற்றிலை மெல்லுவது என்பதுதான் ஏற்பட்டது. அதுவும் திண்ணமான சாப்பாட்டை முடித்ததும் நாக்கே – வெட்கத்தை விட்டு – கேட்டுவிடும்; ஒரு வெத்திலை இருந்தா தேவலையே என்று.
வெறும் வாயை மெல்லுகிற தாத்தாவே கேட்பார்: வாயி நம நமங்கு, ஒரு வெத்திலை போட்டா நல்லா இருக்கும்.



இந்தக் கரும் வெத்திலைத் தாத்தா களிப்பாக்கைத் தூள் பண்ணி ஒரு சிறிய டப்பா நிறைய வைத்துக்கொள்வார். அவருக்கு இந்த லொட்டு லொட்டு என்ற வெத்திலை உரல் சத்தம் பிடிக்காது. டப்பாவைத் திறந்து உள்ளங்கையில் அளவாகத் தட்டி வாயில் இட்டுக்கொண்டு, நாலு வெற்றிலைகளை எடுத்து அவற்றின் முதுகில் சுண்ணாம்பு தடவி, நீட்டு வசத்தில் மடக்கி, கோழிக்குஞ்சின் கழுத்தைப் பிடித்துத் திருகுவது போலத் திருகி வாயில் அதக்கிக்கொண்டு தொடர்புவிட்டுப் போ9காமல் வெள்ளைப் புகையிலையையும் அதேபடிக்கு முறுக்கி ஒடித்து வாயில் இட்டு முத்தாய்ப்புக் கொடுத்து முடித்துவிட்டு, கித்தாய்ப்பாக ஒரு பார்வை பார்ப்பார் இந்த உலகத்தை” -#கிரா|லீலை, 2016: 74.

#ksrpost
23-3-2020.

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...