#சிதைக்காதே! #சிதைக்காதே! #மாணவர்கள்_எதிர்காலத்தை #சிதைக்காதே!
10ம் வகுப்பு தேர்வு இந்த ஆபத்தான நிலையில் தேவையா?
பள்ளி மாணவர்கள ஏதும் அறிய நமது
எதிர்கால தலை முறை. அவர்களுக்கு
சிரம்ம் கொடுக்கலமா...?
பள்ளி மாணவர்களை பற்றி ஆசிரியர்
பதிவு.கலங்மற்ற ஜீவன்கள் அவர்கள்......
பள்ளியில் காலை வரை ஹால் டிக்கெட் வழங்கி முடித்து ஓய்வாய் அமர்ந்திருந்தேன்.---- னும் ------ உம் ஓடி வந்தனர்.முதலாமவன் கையில் நுங்கு.இரண்டாமவன் முகத்தில் வழியும் அன்பு!"சாப்பிடுங்க மேம்!" அன்பொழுக உபசரித்தனர் இருவரும். இவர்கள் இருவரும் இந்த ஆண்டு என் வகுப்பின் மெல்லக் கற்கும் மாணவர்கள்!எப்போதும் பள்ளிக்கு தாமதமாக வருதல்,அல்லது வராமல் இருத்தல்,பற்களைக் கூட ஒழுங்காக தேய்க்காமல்,பரட்டைத் தலையுடன் ஒரு மாதிரியாக கவலையே இல்லாமல் இருத்தல் ஆகியவையே முதலாமவன் அடையாளம். ஒருமுறை பீடி பிடித்து என்னிடம் உடன் பயிலும் மாணவர்களால் சிக்க வைக்கப்பட்டவன்
அன்று என்னுடைய கடுமையான வார்த்தைகளை எதிர்ப்பார்த்து பயந்து போயிருந்தவன் அதற்கு மாறான,அன்பான அணுகுமுறையில் நெகிந்து போய்,கெட்ட பழக்கத்தை விடுத்து ஒழுங்காக தொடர்ந்து பள்ளிக்கு வர ஆரம்பித்து,என்னிடம் மனதளவில் நெருங்க ஆரம்பித்தான்.என்னைப் பார்த்ததும் அன்பாய் சின்ன சிரிப்பு பொங்கும்!பாசமாய் ஒரு பார்வை வருடும்! இன்று நீண்ட நாட்கள் கழித்து என்னைக் கண்டதும் அப்படியொரு மகிழ்ச்சி அவன் முகத்தில். சாப்பிடுங்க மேம் என்று நுங்கை வெட்டி நீட்டினர் நீங்கள் சாப்பிடுங்க,கையெல்லாம் அழுக்காக இருக்கு என்றேன். தண்ணீர் கொண்டு வருகிறோம் கை கழுவிட்டு சாப்பிடுங்க என்று அடம் பிடித்தனர்.பரவாயில்லை,அன்புக்கு நன்றி நீங்கள் சாப்பிடுங்க என்றேன்.திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றனர்.எப்போதும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு கற்பிப்பதே ஒரு ஆசிரியருக்கு ஆத்ம திருப்தி தருகின்ற ஒன்று.அந்த அன்பை அதே அளவு திருப்பித் தருகின்ற குழந்தைகள் இவர்களே! இந்த பேரன்புக்கு இணையேது?
No comments:
Post a Comment