#கரிசல்_மண்ணின்_விவசாயிகளின் #அழுகுரல்_அரசின்_செவிகளுக்கு #ஒலிக்காதா?
————————————————-
#கோவனம்_கூட_மிச்சமில்லை .உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பதை அனுபவம் வாய்ந்த அக்கால விவசாயிகள் சொன்னது வீண் போகவில்லை. இன்னும் 2மாத காலத்திற்குள் வானம் பார்த்த கரிசல் மண்ணில் விதைப்பு பணி துவங்க உள்ள நிலையில் கடந்தமாசி மாதம் விளைந்து வீடு வந்து சேர்ந்த மகசூல் முதிர்கன்னி மாதிரி வீடுகளிலும், குடோன்களிலும், தனியார் சேமிப்பு கிடங்குகளிலும் கோவில்பட்டி கோட்டத்தில் சுமார் 20 ஆயிரம் டன் உளுந்து, கம்பு, வெள்ளைச் சோளம், கொத்தமல்லி, மக்காசோளம், சூரியகாந்தி என சிறுதானியங்கள், பயறு வகைகள் இருப்பு உள்ளது, கொள்வாரில்லை. மகசூல் மூட்டைகளை தினமும் காணும் போது மனதிற்குள் இனம் புரியாத பயம், வேதனை உள்ளது. மருந்துக்குகூட விலை கேட்டு வருவதில்லை வியாபாரிகள் . மண்ணில் விளைந்த மகசூல் மண்ணாகி விடுமோ? விவசாயிகளின் அழுகுரல் அரசின் செவிகளுக்கு ஒலிக்காதா? அரசே விவசாயிகளை காப்பாற்றுங்கள். கட்டுபடியான விலை கொடுங்கள். காலில் விழுந்து மன்றாடி கேட்கிறான் விவசாயி. கோவனம் கூட மிஞ்சவில்லையே.தமிழக அரசு குறைந்த பட்ச ஆதார விலை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதற்கும் நடப்பு விலைக்கும் சம்பந்தமே இல்லை.
No comments:
Post a Comment