#தமிழக_அரசுக்கு_ஏன்_இந்த #சண்டித்தனமான_பிடிவாதங்கள்_
#என்று_தெரியவில்லை?
சூழ்நிலைகளையும் ஆபத்துகளை அறியாமல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்பதும், மதுக்கடைகளை தாராளமாக திறந்ததும், மின் கட்டணங்களில் குளறுபடிகளின் என்று இந்த சமீபத்திலேயே இப்படி மக்களுக்கு எதிரான சீர்கேடுகளை நன்கு தெரிந்தே செய்வது காலமும் இயற்கையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
பத்தாம் வகுப்பு தேர்வில் இன்று உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன் சொன்ன வாதமெல்லாம் வேடிக்கையாக உள்ளது. இன்னொரு தகவல் இந்த விஜயநாராயணன் வேறு யாரும் இல்லை இன்றைக்கு தமிழகம் அமைந்த எல்லைகளை மாற்றியமைத்த புண்ணியவான் கே.எம்.பணிக்கரின் Kavalam Madhava Panikkar பேரன் என்பார்கள். அவரால் தேவிகுளம் -பீர்மேடு, தெற்கே திருவனந்தபுரம் அருகில் நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, வடக்கே பாலக்காடு அருகே அட்டப்பாடி அருகேயுள்ள கிராமங்களை தமிழகம் இழந்தது. அதே போல தான் கர்நாடகத்திலும் கொல்லேகால், ஆந்திரத்திலும் தமிழர் பகுதியை இழந்தோம். அந்தப் பணிக்கரின் பேரன் தான் இன்று தமிழக அட்வகேட் ஜெனரலாக இருக்கிறார் என்று செவி வழி வந்த தகவல்.உண்மையா?
#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
08.06.2020
No comments:
Post a Comment