*#பாண்டி_பஜார்_துப்பாக்கிச்சூடு #பிரபாகரன்_கைது_விவகாரத்தை #விசாரித்த_ஓய்வுப்_பெற்ற_அதிகாரி #எனக்கு_அனுப்பிய_தகவல். * (பதிலின் ஸ்கிரீன்ஷாட்)
————————————————
பாண்டி பஜார் துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு பிரபாகரனுடைய கைது, அவருக்கு உயர்நீதிமன்றத்தில் பிணை வாங்கிய செய்தியெல்லாம் ஒருவரின் தவறான தன்னுடைய பேட்டியை ட்விட்டரில் போட்டதற்கு பதிலளித்திருந்தேன். நான் நேரடியாக பங்கேற்று அந்த பிரச்சினையில் நேர்மையாக பணியாற்றியதை சொல்லக்கூட சமுதாயத்தில் சிரமமாக இருந்தது. உண்மைகளை ஏற்பதற்கு தயக்கங்களும் பிழைகளையும் உண்மைக்கு மாறான கருத்துகளை இந்த சமுதாயம் எளிதாக ஏற்றுக் கொள்கிறது. இது தான் இன்றைய நிலை.
சரி,பிரச்சினைக்கு வருகின்றேன். வேலுப்பிள்ளை பிரபாகரன் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு கடந்த 19.05.1982 இரவு 9.30 மணிக்கு பிறகு மாம்பலம் (பாண்டி பஜார்) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அன்றிரவு காவல் நிலையத்தில் அவரையும் அவருடைய சகாக்களையும் இரவில் வைத்து விட்டு,மறுநாள் சிபிசிஐடி பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. புலனாய்வு அதிகாரியாக திரு. வெள்ளயங்கிரி இருந்தார். அவர்தான் முழுமையாக இறுதி வரை இந்த வழக்கை நடத்தியவர். அந்த வழக்கில் அவருக்கு துணையாக இருந்த காவல்துறை அதிகாரி தான் இந்த மோகன் ரத்தினசபாபதி. அவர் அனுப்பிய பதிலின் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே இணைத்துள்ளேன். அதைப் படித்தாலே உண்மை வெளிப்படும். இதெல்லாம் புரியாமல் விருப்பத்திற்கேற்றவாறு நடந்ததையும் வரலாற்றையும் திருத்திச் சொல்வது மாபெரும் தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும். அவர்களுக்கு பொறுப்பு வேண்டும். இன்றைக்கு இணையத்தில் இருப்பவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதலாம் பேசலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டால் வரலாறு வரலாறாக இருக்காது.
எவ்வளவு தான் என்னுடைய பணிகள் நேர்மையாக செய்தாலும் அது வெளியே வராது. வரவும் விடமாட்டார்கள். இது என்னுடைய கடந்த கால வரலாறு. இது என்னுடைய ஊழ் என்று சொல்லமாட்டேன். இது தான் இன்றைய இடமாறு தோற்றப்பிழையான போக்காகும். தமிழ்நாட்டின் உரிமைக்காக கண்ணகி கோவில் பிரச்சினை, காவிரி நதிநீர் சிக்கல், இந்திய நதிகள் கங்கை- தாமிரபரணி குமரி வரை இணைப்பு, மேற்கு-கிழக்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு, தேர்தல் சீர்திருத்தங்கள், பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள், தமிழகத்தில் ஏரி-நீர்நிலை பாதுகாப்பு, விவசாயிகள் மீதான ஜப்தியை நிறுத்தி கடன் நிவாரண திட்டங்களை பெற்றது, மனித உரிமை வழக்குகள்,கூடங்குளம் அணுமின் பிரச்சினை போன்ற சூற்று சூழல் பாதிப்பு வழக்குகள் என 30க்கும் மேலான தமிழகத்திற்கு முக்கியமான வழக்குகளை உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்து வழக்குமன்றத்தில் போராடியதும், ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஐநா மன்றம் வரை சென்றதும், திமுக நடத்திய டெசோ பணிகளும், ஜெயலலிதா ஊழல் வழக்கை கர்நாடகத்திற்கு ஆரம்பகட்டத்தில் மாற்றியதும், கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது மனித உரிமை ஆணையத்தின் கதவினை தட்டி நியாயம் கேட்டது என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதெல்லாம் செய்யும் போது ஏற்படும் சிரமங்களை யார் நினைக்கின்றார்கள்? நினைப்பதில்லையே.... அது தான் இன்றைய உலகம். என்னுடைய உழைப்பு அடுத்தவர்களுக்கு பயன்பட்டு அதனால் அவர்கள் தான் பெயரும் புகழும் பெற்றார்களோ.. பெறட்டும். அதைப் பற்றியெல்லாம் நான் அதிகம் கவலைப்படுவதில்லை. ஏனெனில் நான் இழந்தது அதிகம் பெற்றது எதுவும் இல்லை. இதையெல்லாம் கடந்த 49 வருட எனது அரசியல் வாழ்க்கையில் எளிதாக கடந்துக் கொண்டிருக்கின்றேன். அப்படித்தான் இந்த பாண்டி பஜார் சம்பவத்திலும் யாரோ ஒருவர் உணமைக்கு மாறாக பேசும் போது நான் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது அல்லவா. என்னைப் பொறுத்தவரை பாரதி சொன்னது போல், “துள்ளிவருகுதே வேல் பகையே ஒதுங்கி நில்” என்பது எனக்கு பிடித்தமான வரிகள். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவது கிடையாது. சிலருக்கு உழைத்து நம்பியவர்களால் ஒடுக்கப்பட்டேன். அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளமால் அலட்சியமாக எடுத்துக் கொள்கிறேன். பாசாங்கு இல்லாமல் நான் நானாக
இருகிறேன். அதுவே எனது மகிழ்ச்சி.
நன்றி மோகன் ரத்தினசபாபதி.
பாண்டி பஜார் சம்பவம் குறித்த பதிவு: http://ksradhakrishnan.in/?p=22364
என்னைக் குறித்தான குறிப்பு: http://ksradhakrishnan.in/?page_id=10
#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
19.06.2020

No comments:
Post a Comment