Friday, November 27, 2020

 

"#கம்பராமாயணத்தில்" காண்கிற மாதிரி வேறு எந்த நூலிலும் காணமுடியாத வஸ்து ஒன்று: அதுதான் செருகு கவி. கம்பராமாயண புஸ்தகம் செருகு கவி மயம் என்று சொன்னால்க் குற்றமில்லை. எப்படிச் செருகு கவிகள் வந்து சேர்ந்தன என்பதைப் பார்க்கலாம்.








ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்:
குடிகளைக் காப்பது பெரிய தர்மம் என்றே தசரதன் எண்ணுகிறான்; தான் மிக்க சிரத்தையோடும் ஆர்வத்தோடும் காத்து வந்ததாகச் சொல்லுகிறான். ஆனாலும், தனக்குக் கொஞ்சம் ஓய்வு வேண்டுமென்றும், ராமன் அந்த உயரிய தர்மத்தை நடத்த வேண்டும் என்றும் சொல்லுகிறான். ராஜ்ய பரிபாலனத்தை இகழ்வது என்று ஏற்பட்டு விட்டால், ராமனை ஏற்றுக்கொள்ளும்படி பரிவுடன் சொல்லுகிற வார்த்தை பொருந்துமா? பொருந்தவே பொறுந்தாது . போலிக் கவி ஒன்று வந்து, தசதரனுடைய இதமான, நளினமான பேச்சை எப்படிக் கெடுக்கிறது என்று பாருங்கள்.
கச்சையங் கடகரிக்
கழுத்தின் கண்ணுறப்
பிச்சமும் கவிகையும்
பெய்யும் இன்னிழல்
நிச்சயம் அன்றெனில்
நெடிது நாளுண்ட
எச்சிலை நுகருவது இன்பம் ஆகுமோ?
- மந்திர படலம்
இது மாதிரிப் போலிக் கவிகளை இயற்றிய ஆசாமி, இந்தக் கட்டத்தில் ஏழோடு விட்டு விட்டார். எழுபது எழுநூறாகக் கயிறு விட்டிருக்கலாம்; ஏதோ கருணையினால் அப்படிச் செய்யவில்லை!"
-#ரசிகமணி_டி_கே_சி.
(கம்பர் தரும் ராமாயணம் முகவுரையில் செருகு கவிகள் பற்றி டி.கே.சி. எழுதிய தகவல்களில் ஒரு பகுதி.)

(படம்-ரசிகமணி,சின்ன அண்ணாமலை)

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்