Saturday, April 22, 2023

‘’நிலவு ஒருபெண்ணாகி உலவுகின்றஅழகோ’’ என்ற பாடல் கேட்டதும் (எப்போதும்) பல நினைவுகள் வரும்.. ‘’மலரே குறிஞ்சி மலரே ‘‘ என பல பாடல்கள் கேட்டால் கல்லூரி நாட்களின் ஞாபகம் வந்து விடும். ‘’#வாலி"பன் கவிதை உலகின் தாலிபன்.

தற்போது இரவு 12.35 வாசிப்புடன் ரேடியோவில் ‘’நிலவு ஒருபெண்ணாகி உலவுகின்றஅழகோ’’  என்ற பாடல் கேட்டதும் (எப்போதும்) பல நினைவுகள் வரும்..
‘’மலரே குறிஞ்சி மலரே ‘‘ என பல பாடல்கள்
கேட்டால் கல்லூரி நாட்களின்  ஞாபகம் வந்து விடும்.

‘’#வாலி"பன் கவிதை உலகின் தாலிபன். 

 நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ 
நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூ
போலே மலருகின்ற
இதழோ 
மான் இனமும் மீன்
இனமும் மயங்குகின்ற
விழியோ

புருவம் ஒரு
வில்லாக பார்வை
ஒரு கணையாக 
பருவம் ஒரு தளமாக
போர் தொடுக்க பிறந்தவளோ

குறுநகையின்
வண்ணத்தில் குழி
விழுந்த கன்னத்தில் 
தேன் சுவையை தான்
குழைத்து கொடுப்பதெல்லாம்
இவள் தானோ

பவளமென விரல்
நகமும் பசும் தளிர் போல்
வளைகரமும்

பவளமென விரல்
நகமும் பசும் தளிர் போல் ரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

தேன் கனிகள்
இரு புறமும் தாங்கி
வரும் பூங்கொடியோ

ஆழ்கடலின்
சங்காக நீள்கழுத்து
அமைந்தவளோ 
யாழிசையின் ஒலியாக
வாய்மொழி தான்
மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி
எடுத்து சந்தனத்தின்
குளிர் கொடுத்து

பொன்பகட்டில்
வார்த்துவைத்த
பெண்ணுடலை
என்னவென்பேன்

மடல்வாழை
தொடை இருக்க மச்சம்
ஒன்று அதில் இருக்க 
படைத்தவனின் திறமை
எல்லாம் முழுமை பெற்ற
அழகி என்பேன்

நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ..

-வாலிப கவிஞர் வாலியின் வரிகள்…

உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். 
எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படம்.

மாணவர் காங்கிரஸ் நிர்வாகி, அப்போது மாணவர்கள் போராட்டங்களில் திருநெல்வேலி St Xavier’s,திருச்சி St Joseph, அண்ணாமலை பல்கலைக்கழகம்,
கோவை,சென்னை என தமிழகம் முழுதும்
அலைந்து  திருந்த நாட்கள். எம். ஜி. ஆர் திமுகவில் இருந்து நீக்கபட்டு போது மதுரை முத்து உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மதுரையில் திரையிட முடியாது என சாவால் விட்டு தோற்ற மதுரை முத்து திமுகவை விட்டு விலகி அதிமுகவில் சேர்ந்தார் என்பது வேறு விடயம்.

அந்த நாட்களில் மாணவர்கள் விரும்பி கேட்கும் பாடல் இது.அந்த இளமை காலத்தில் குளியல் அறையில், தனிமையில் ரசித்து பாடும் பாடல். ஒரு முறை பழைய எம் எல் ஏ ஆஸ்டலில் பி.ஜி. கருத்திருமனை (தமிழக சட்டமன்ற எதிர் கட்சி தலைவராக இருந்தவர்) சந்திக்க சென்ற போது அவர் இல்லை  சந்திக்க சற்று காத்திருந்த போது
தனியாக இந்த பாடல் வரிகளை முனு முனுத்த போது  எங்கள் கோவில்பட்டி தொகுதி எம்எல்ஏ  சோ.அழகர்சாமி,
கே.டி.கே தங்கமணி பின்னால் நின்று கேட்டு விட்டு என்னை கிண்டல் செய்யது
நினைவில் உள்ளது.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
22-4-2023

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...