Wednesday, April 5, 2023

தஞ்சை தரணியில் ஏரோட்டும் உழவன் தவிக்கையிலே உனக்கு தேரோட்டம் எதற்கு திருவாரூர் தியாகராஜா - - - கலைஞர் (1950-60) -இன்றைய திமுக….

தஞ்சை தரணியில் ஏரோட்டும் உழவன் தவிக்கையிலே உனக்கு தேரோட்டம் எதற்கு திருவாரூர் தியாகராஜா - - - கலைஞர் (1950-60) 

சுயமரியாதை, தன்மானம், பகுத்தறிவு என்று சொல்கிறார்கள். அப்படியிருக்கக் கூடியவர்கள் ஏன் பதவி பெறும் நோக்கத்துடன், காலை நக்கிக் கொண்டு அடிமைத்தனமாக, உங்கள் வீட்டு விசுவாசி என்று சொல்ல வேண்டும்? அப்படிச் சொல்பவர்கள்தான் பாதை மாறாமல் பயணிக்கின்றனர். ஆனால் உண்மையிலேயே சுயமரியாதை, தன்மானம், பகுத்தறிவு உடையவர்கள் தங்களுடைய  லட்சியப் பயணத்தில் பாதை மாறித்தான் தங்களின் இன்றைய நிலை, போக்கில் இலட்சிய இலக்கை நோக்கி செல்ல வேண்டும். வேறு வழியில்லை. பாதை மாறா பயணத்தில் முட்கள், சேறுகள் உள்ளன. இவற்றில் கால் பதிக்கமால் இலட்சிய இலக்கை நோக்கி சற்று விலகி பாதை மாறித்தான் செல்ல முடியும்.
 
அரசியலில் பாதை மாறாமல் இருக்க தாத்தா, அப்பா ஏற்கெனவே அரசியலில் இருக்க வேண்டும். அல்லது பதவிக்காக தாத்தா, அப்பா, பேரன்களின் காலை நக்கிக் கொண்டு, அவர்களுடைய விசுவாசி என்று சொல்லிக் கொண்டு அடிமையாக இருக்க வேண்டும்.
 
சுயமரியாதை, தன்மானம், பகுத்தறிவு உள்ளவர்கள் தங்களுடைய  இன்றைய அரசியல் பயணத்தில் பாதை மாறித்தான் ஆக வேண்டும்.

மூத்தவர்கள் கூடசிலரின் செருப்புத் தூக்குவதில் இருக்கிறது சுயமரியாதை….ஸ்டாலினின் 70 வயது முழுமையானதைத் தொடர்ந்து பீமரத சாந்தி நேர்த்திக் கடன் செலுத்திய ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் செயலில் இருக்கிறது பகுத்தறிவு... திருவாருரில் குதிரை வண்டியில்  அம்பாரி/ தேர் போல பவனி……
இவற்றையெல்லாம் திராவிட மாடல் என்று கி.வீரமணி பாராட்டுவது இந்த புதிய பகுத்தறிவு!
சுயமரியாதை, பகுத்தறிவு,  திராவிட மாடல் புதிய விளக்கம்!

பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்கியுள்ளரர்கள் . இப்படித்தான் நிலை இருக்கும். எதையும் கேட்கமுடியாது….

****

அறிவு.... பகுத்தறிவு!
யார் எதைச் சொன்னாலும் ஆராய்ந்து பார்த்து அதன் உண்மைத் தன்மையைக் காண்பதுதான் அறிவுடையோர் செய்யும் செயலாகும். இதைத்தான் வள்ளுவர் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிதவு என்றார். 
 தனக்குப் பிடிக்காதவர்கள் கூறும் கருத்தின் மெய்ப்பொருள் எதைப் பற்றியும் யோசிக்காமல், அவர்களைத் தாறுமாறாகத் தூற்றுவதுதான் நம்மூரில் பகுத்தறிவு.

#KSR_Post
5-4-2023.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்