Friday, April 14, 2023

#நடிப்பிசைபுலவர் கே.ஆர்.ராமசாமி MLC



————————————————————
தமிழ் திரையுலகில் முதல் கட்டஅரசியல் வாதி நடிப்பிசை புலவர் கேஆர் ராமசாமி
அவர்கள் 109 வது பிறந்தநாள்.

கும்பகோணத்தில் அம்மா சத்திரம்
பின்னாளில் திராவிட, பகுத்தறிவு சிந்தனைகளை, நாடகங்களில், திரைப்படங்களில்,
பேசத் துவங்கினார்.
 இன்றைய சூழலில் எந்த அரசியல்இயக்கமும், ஏன் 
திரையுலகில் கூட,
யாருமே இவரை நினைவு கூறாதது வருத்தத்திற்குரியது.

நாடக உலகில் தனது பதினோறாவது வயதில் பாய்ஸ் கம்பெனியில் தனது கலைப்பயணத்தை துவங்கினார்.
நாடக உலகில் இவர் 
எம்ஜிஆர், 
பியூ சின்னப்பா,
காளி என் ரத்தினம், ஆகியோருக்கு
முன்னோடியாக திகழ்ந்தவர்.
இவ்வாறு
பாய்ஸ் கம்பெனியில் நடித்துக்கொண்டிருந்த போது கலைவாணர் திரு என் எஸ் கிருஷ்ணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டு,
அவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.அவருடன் பல நாடகங்களில் பல இடங்களுக்கு குழுவாக சென்று நடித்துவந்தனர்.இலங்கையில் நடந்த நாடகத்தில் பல வேடங்களில் நடித்தாலும், பெண் வேடத்தில் கதாநாயகியாக நடித்த மேனகா என்ற கதாபாத்திரம் மறக்கமுடியாத ஒன்று.

இவருடைய முதல் திரைப்படம் 1941 ல் வெளிவந்த குமாஸ்தாவின் பெண். 
இந்த சமயத்தில் இவர் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் ஆதரவாளராக
மாறி அவர்கள் கொள்கைகளை பின்பற்ற துவங்கினார். இந்த திரைப்படத்தில்
இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்ததாக பேரறிஞர் அண்ணா எழுதினார்.
இந்த படத்தில் உதவி இயக்குனர்
கிருஷ்ணன்- பஞ்சு.இதே காலகட்டத்தில் கலைவாணர்  என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் எதார்த்தம் பொன்னுச்சாமி நாடகக்குழுவை இவரிடம் ஒப்படைத்து நடத்தச்சொன்னார்.
கலைவாணர் என்எஸ்கிருஷ்ணன்
லட்சுமி காந்தன் கொலைவழக்கில் கைதான சமயத்தில் கலைவாணர் அவர்கள் மனைவி டிஏ மதுரம் மற்றும்
எஸ்வி சகஸ்வரநாமம் ஆகியோருடன்
நாடகக் குழுவை விட்டு விலகி தனது
சொந்த நாடகக்குழுவான என்எஸ்கிருஷ்ணன் பெயரில்
கிருஷ்ணன் நாடக குழுவை துவக்கினார்.

1946 ல் முதன் முறையாக பேரறிஞர் அண்ணாவின் வேலைக்காரி கதையை
நாடகமாக அரங்கேற்றினார்.
இந்த நாடகம் தஞ்சை ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் ஒரு ஆண்டு
முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நாடகம்
1949 ல் நடிப்பிசை புலவர் கேஆர் ராமசாமி கதாநாயகனாக நடிக்க திரைப்படமாக எடுக்கப்பட்டது.இந்த படத்தில் இடம்பெற்ற நீதிமன்றகாட்சியில் சமுதாய மூடநம்பிக்கை மற்றும் பழக்க வழக்கங்களை சாடிய
வசனங்கள் இடம் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றது.

கதாநாயகனாக புகழ் பெற்றாலும்
நாடகங்களில் நடிப்பதை தொடர்ந்தார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் நண்பராகவும், சிறந்த ஆதரவாளராகவும்,
இருந்ததால் இவருடைய நாடகங்கள் மூலமாக கிடைத்த நிதி திமுக கட்சிவளர்ச்சிக்கு பயன்பட்டது.முதல்
திமுக தலைமை அலுவலுகம் ராயபுரத்தில்
இவரின் பெரிய உதவியால் அண்ணா காலத்தில் அறிவகம் வாங்கப்பட்டது . அங்கிருந்தான் 1950 களில் முதல்முறையாக தேர்ந்து தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் அண்ணா தலைமையில்  இங்கிருந்துதான் சட்டமன்றத்துக்கு சென்றனர்.

பேரறிஞர் அண்ணா வின் ஓர் இரவு கதையை நாடகமாகவும், திரைப்படமாகவும் 
எடுத்து அதில் கதாநாயகனாக நடித்தார்.1949 ல்
திமுக கட்சி துவங்கிய காலத்தில் இருந்து
பேரறிஞர் அண்ணா வுடன் இணைந்து கட்சிவளர்ச்சிக்காகவும் பணியாற்றினார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
தனது சுயசரிதையில்
அண்ணா,பெரியார் இருவரிடம் தன்னை
அறிமுகப்படுத்தியது 
கேஆர் ராமசாமி என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திரு எம்ஜிஆர் குறிப்பிடும் போது இருவரும்பல சமயங்களில் ஒரே கதாபாத்திரத்தில்நடித்ததையும் ஒரு முறை கேஆர்ஆர் சிறந்த பாடகராக இருந்தபோதும் நாரதர் வேடத்திற்கு தன்னை தேர்வு
செய்ததால் கேஆர்ஆர் அந்த நாடக குழுவை விட்டு விலகி டிகேஎஸ் சகோதரர்களின் பாலசண்முகானந்த சபாவில்1928 ல்இணைந்ததையும் எம்ஜிஆர் நினைவு கூர்ந்துள்ளார் தனது சுயசரிதையில்.

நடிகர் திலகம் சிவாஜி அவர்களும்
நடிப்பிசை புலவர் கேஆர்ஆர் அவர்கள்
தனது மூத்த நடிக நண்பர் எனவும்,
மனோகரா நாடகமாக நடத்தப்பட்ட போது
(கேஆர்ஆர்)மனோகராவின் தாயாராக 
பத்மாவதியாக,தான் நடித்ததை நினைவு கூர்ந்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவுக்கு பிறகு கேஆர்ஆர் அவர்களும்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 
1971 ஆண்டில் 
மறைந்தார்.

இவருடைய மகன் மதிவாணன்
நினைவு கூறும் போது அவருடைய இறுதி நாட்களில் வேலூர் மருத்துவமனையில் ஹீமோத்தெரபிசிகிச்சையில் இருக்கும் போது
தான்  தி நகரில்
நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றுஆசைப்பட்டுள்ளார.
அதேபோல் அந்த
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது பொதுமக்கள் அவரை கடைசியில்
ஒரு பாடல் பாடுமாறு கேட்டுள்ளார்கள்.

அவர் "பாடமாட்டேன் நான் பாடமாட்டேன்"
என்ற புகழ்பெற்ற பாடலை பாடியுள்ளார்.
அதுவே பொதுவெளியில் அவர் பாடிய
கடைசி பாடல்.

நடிப்பிசை புலவர் கேஆர்ஆர் மொத்தம்
25 படங்கள் நடித்துள்ளார்.1960 ல்
முதன்முறையாக எம்எல்சி யான நடிகர் இவரே.
அண்ணாவின் நிழலாக, திமுகவின் தொண்டராக, தனது இறுதி நாட்கள் வரை இருந்துள்ளார்.தனது சம்பாத்தியத்தில் வந்த பணத்தில்பெரும் பகுதி திமுக கட்சி வளர்ச்சிக்கு அளித்ததில் இவருடைய மறைவுக்கு பின்
இவருடைய குடும்பம் சிறிது காலம்
வறுமையில் இருந்துள்ளது.

எம்ஜிஆர் அவர்கள் இந்த குடும்பத்திற்கு
பண உதவி செய்து இவருடைய மகன்
மதிவாணன் அவர்களுக்கு கலைவாணர் மகள் கலைசெல்வியை திருமணம் செய்து வைத்து  அரசு சார்பில் கல்யாணி ராமசாமிக்கு (வாரிய தலைவராக எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தார்)ஒரு வீடு ஒதுக்கி உதவியுள்ளார். அவருக்கு புகழஞ்சலி.

#நடிப்பிசைபுலவர்_கேஆர்_ராமசாமி

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...