Monday, April 17, 2023

மாநிலக்கட்சிகள் #தேசியகட்சிகள் #Indian Politicalparties

#தேசியகட்சிகள்... #மாநிலக்கட்சிகள்!
————————————————————-
 நமது நாட்டின் ஜனநாயக முறையில் பல கட்சிகள் செயல்படுகின்றன. அவை தேசிய கட்சிகள் என்றும் மாநில கட்சிகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு வகைப்படுத்தி அங்கீகாரம் அளிப்பது தேர்தல் ஆணையத்தின் பணியாக உள்ளது. 
இவ்வாறு வகைப்படுத்துவதற்கான அளவுகோலாக அதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையாக உள்ளன. 
தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு கட்சி போட்டியிட்டு, குறைந்தபட்சம் 6  சதவீதம் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது மக்களவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் போட்டியிட்டு 2 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற கடைசியாக நடைபெற்ற மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளைப் பெற்று 2  சட்டப் பேரவை உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது மொத்த சட்டமன்றத் தொகுதிகளில் 3 சதவீத தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அல்லது கடைசியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஏதாவது ஒரு மாநிலத்தில் 6  சதவீத வாக்குகளைப் பெற்று 1 நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்க வேண்டும்.
கடந்த 2014 மற்றும் 2019 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்கள், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு 21 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் கட்சிகளை தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள் என்று வகைப்படுத்தி உள்ளது.
அதன்படி, பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி (சங்மா), ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தேசிய கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளன. 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் (மே.வங்கம்), தேசியவாத காங்கிரஸ் (மகாராஷ்டிரம்) ஆகியவை தேசிய கட்சி என்ற தகுதியை இழந்துவிட்டன. மாநிலக் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாகத் தகுதி பெற்றுள்ளது. பாரத ராஷ்டிர சமிதி (ஆந்திர பிரதேசம்), ராஷ்ட்ரீய லோக் தளம் (உத்தரபிரதேசம் ), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ( மே.வங்கம்), பாமக (புதுச்சேரி) ஆகியவை மாநிலக் கட்சி என்ற தகுதியை இழந்துவிட்டன.

#மாநிலக்கட்சிகள்
#தேசியகட்சிகள்
#Indian_Politicalparties
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost
17-4-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...