#கோவில்பட்டிமாவட்டம்_அமைதல்
————————————————————-
Kovilpattiகோவில்பட்டிKovilpatti news
கோவில்பட்டி தனி மாவட்டமாக அமைய வேண்டும் என்று 2005 – இலிருந்து கோரிக்கையாக முன் வைத்து அவ்வட்டாரத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளில் பலமுறை பேசியுள்ளேன். அத்தோடு கோவில்பட்டி, கயத்தாறு விமான நிலையங்களைச் சீர்படுத்தி விமானநிலையங்கள் அமைய வேண்டும் என்று கடந்த 2000 - இலிருந்து சொல்லி வருகிறேன். தினமணி போன்ற ஏடுகளிலும் அதைக் குறித்து எழுதியுள்ளேன். கோவில்பட்டி மாவட்டம் அமைக்கப்பட உத்தேசம் உள்ளது என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். மகிழ்ச்சிதான்.
அமையவிருக்கும் கோவில்பட்டி மாவட்டத்தில் திருவேங்கடம் தாலுகா, கயத்தாறு ஒன்றியம் உள்ளடங்கிய ஓட்டப்பிடாரம் பகுதிகள், விளாத்திகுளம் தாலுகா, கோவில்பட்டி தாலுகா, சாத்தூர் தாலுகா, வெம்பக்கோட்டை ஒன்றியம் பகுதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் வலியுறுத்திப் பேச கால, நேரம் கேட்டுள்ளேன். இதற்கான கடிதமும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
****
12.04.2023
மாண்புமிகு முதல்வர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
சென்னை.
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
கோவில்பட்டி மாவட்டம் அமைதல் தொடர்பாக, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தூர், திருவேங்கடம், வெம்பக்கோட்டை மற்றும் கோவில்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர்களும், விவசாயிகளும் மற்றும் நானும் தங்களை நேரில் சந்தித்துப் பேசி, கோரிக்கை மனு ஒன்றை அளிக்க இருக்கிறோம். தங்களைச் சந்திப்பதற்கான நாளை வழங்கி எங்களுக்கு காலத்தை ஒதுக்கித் தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புள்ள,
(கே.எஸ்.இராதாகிருஷ்ணன்)
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்.
#ksrvoice, #K_S_Radhakrishnan, #கேஎஸ்ஆர்,, #கேஎஸ்ஆர்போஸ்ட்,,
#KSR_Post
12-4-2023.
No comments:
Post a Comment