#இலங்கைதமிழர்கள்பிரச்சனை இந்திய அரசு
————————————————————-
ரணில் இலங்கையிலிருந்து டெல்லிக்கு வர இருக்கின்றார். இலங்கை தமிழர்களின் பிரச்னைகள் குறித்து கவிஞர் காசி ஆனந்தன், இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்ற நண்பர்களிடம் இருந்து பெற்ற தரவுகளைக் கொண்டு நான் மத்திய அரசுக்கு குறிப்புகளை கடந்த 2 வருடங்களாக முறையாக அனுப்பி வைத்தேன். அந்த குறிப்புகளைப் பரிசீலித்து அது தொடர்பாக ரணிலிடம் பேசக் கூடிய வாய்ப்பு இருப்பதாக இன்றைக்கு (9-4-2023)காலையில் எனக்கு செய்தி கிடைத்தது.
1. கச்சத் தீவு விவகாரம். அங்கே அவசியமற்ற முறையில் புத்தர் சிலையை வைத்தது குறித்து,
2. நேற்று முதல் நாள் வரை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும் கைது செய்வதும் குறித்து,
3. சீன ஆதிக்கம், இந்தியப் பெருங்கடலின் புவியரசியல் மற்றும் அதன் தன்மையான அமைதி மண்டலம் குறித்து,
4. இலங்கைத் தமிழர் அரசியல் அதிகாரம் பெறுதல் குறித்து,
5. அங்கு சைவம், தமிழ் அடையாளங்ளை அழித்து, சைவக் கோவில்களை நூற்றுக்கணக்கில் இல்லாமற் செய்தது மற்றும் திரிகோணமலை, மன்னார் சிவாலயங்கள் பிரச்னைகள் குறித்து,
6. திரிகோணமலை துறைமுக கேந்திரப் பகுதி குறித்து,
என பல சிக்கல்களை, பேசும் பொருளாக இந்திய அரசு தயாரித்துள்ளது என்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
7. சமீபத்தில் இந்தியப் பெருங்கடலில் ரஷ்யா,சீனா,இலங்கை, தென்ஆப்பிரிக்கா இணைந்து நடத்திய இராணுவ பயிற்சி,சீனாவின் உளவு வேலை, அதன் ராடர் அமைப்பு குறித்து,
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலுக்குப் பிறகு சீனாவைக் காட்டிலும் இந்தியா அதிகமாக இலங்கையின் கஷ்டமான நேரத்தில் உதவியுள்ளது என்பதை மத்திய அரசு கறாராக எடுத்துச் சொல்லும் சூழலும் உள்ளது.
#tamils_in_srilanka_issue
#இலங்கைதமிழர்கள்_பிரச்சனை
#K_S_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்
#KSR_Post
9-4-2023.
No comments:
Post a Comment