காலத்தின் ஊசியால்
மடிப்புகளை இயைத்துத்
தைக்கவே முனைகின்றேன்
நினைவுகளின் கூர்மையால்
இழைகள் மீண்டும் மீண்டும்அறுந்து போகின்றன…பள்ளி, கல்லூரி, அவள், சுற்றி திரிதல் ஶ்ரீநகர் டால் லேக்-குள்மார்க்-பெகல்காம்-சிம்லா -வாரணாசி கங்கை பிரமபுத்திரா-மேற்கே தார் சுடுமணல்- துங்கபத்ரா-கோதாவரி - கிருஷ்ணா-காவேரி-தென் குமரி முக்கடல் வரை, இளமை-மாணவர் கால அரசியல்,அன்றைய தலைவர்கள் என…. மறக்க நினைக்கிறேன்
ஞாபக மடிப்புகளுக்குள்
ஒளிந்து கொண்டு அவ்வப்போது
எட்டி எட்டிப் பார்க்கின்றாய்…
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-4-2023.
No comments:
Post a Comment