நம்மை மீறி
நம் தலையீடுகளை மீறித்தான் இந்த வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நகர்கின்றது
பின்பு எதற்காக
இந்த வாழ்வை நினைத்து
நாம் வருந்திக்கொண்டிருக்கவேண்டும்.
தான்உயர வேண்டும் எனநினைப்பவன்மனிதன்.!
தன்னோடு இருப்பவர்களும்
சேர்ந்து உயர வேண்டும் எனநினைப்பவன் மாமனிதன்.!!
****
நினைவுகளின் வடிவம்
வட்டமிடும்
இனிய நினைவுகளை
எவ்வளவு சுற்றுகளாயினும்
சுற்றி
முடிந்து கொள்கிறேன்
இலகுவாக மனதில்
கட்டங் கட்டும்
நினைவுகளின்
திடீர் திசைமாற்றங்கள் தான்
தடுமாற வைக்கின்றன
#வானதி_சந்திரசேகரன்
(வறன்ட வானம் பார்த்த கந்தக கரிசல் பூமியில் , விளாத்திகுளத்தில் பூத்த பூ!)
#ksrpost
2-4-2023.
No comments:
Post a Comment