—————————————
நேற்று இந்த கருங்காலிக்கட்டைகளை கிடைக்கப்பெற்றேன்.இதை பற்றி டில்லி, வடபுல மாநில நண்பர்கள் சொல்த்லிதான் எனக்கு தெரியும். இதுவரை இந்த குச்சிகளை 10 வரை பல முக்கியமானவர்களுக்கு குடியரசு முன்னாள் துணை குடியரசு தலைவர் எம். வெங்கையநாயுடு, தமிழக ஆளுநர், மத்திய
அமைச்சர்கள் என்னிடம் கேட்டு வழங்கியுள்ளேன்
கருங்காலி மரம் பல்வேறு வடிவங்களில் இன்று கிடைக்கின்றது. கருங்காலி மரம் என்பது சாதாரண மரம் போல் அல்லாமல் நாளாக நாளாக கருமை அடையக் கூடியது. பழங்காலம் முதல் இன்று வரை குறி பார்க்கும் நபர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் கையில் ஒரு கோல் வைத்திருப்பார்கள்.
நாம் வாழ்கின்ற இந்த பூமியில் நம்மை சுற்றிலும் நல்ல சக்திகள் நிறைந்து இருக்கும். எந்த விசைக்கும் ஒரு எதிர்விசை உண்டு என்பது அறிவியல் ஒப்புக் கொண்டுள்ள உண்மை. அது போல நல்ல சக்திகள் என்பது பூமியில் இருக்கும் பொழுது அதற்கு எதிர்மறையான சக்திகளும் இருக்கத் தான் செய்யும். ஆனால் அது நாம் இப்படியிருக்கும் சக்திகள் சில விசேஷ மரங்களால் ஈர்க்கப்படும். அவ்வகையில் நல்ல சக்திகளை ஈர்க்கும் இந்த மரம்.
பொதுவாக கருங்காலி மரம் எதையும் இழுத்து வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. மின்னல் தாக்கினாலும் அந்த மரம் சேதமடையாது, காரணம் என்னவென்றால் அந்த மரம் இயல்பிலேயே மிகவும் உறுதியானது.
உறுதியான ஒருவரை நல்லா கருங்காலி கட்டை மாதிரி இருக்கானே என நக்கலாக நம்ம ஊர் வழக்கத்தில் சொல்வதுண்டு. கையில இது சில நேரங்கள் இருந்தால் அதன் வீச்சு நம்பிக்கை,மன உறுதி நமக்கு அதிகமாக ஏற்படும்.
படத்தில் இருக்கும் மரம் தான் #கருங்காலி_மரம் இந்த மரம் மிகவும் அபூர்வமான மரங்களில் ஒன்று.இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம்.
பராமரிப்புகள் இல்லாமல் இயற்கையாகவே நமது வனங்களில் வளர்ந்து பயன் தந்த நமது மரங்களில் ஒன்று கருங்காலி. எமது வளங்களில் ஒன்றாக காலநிலையை சீர்ப்படுத்தி, பருவ காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட பெரு மரங்கள் கருங்காலி, நீல வேம்பு, முதுரை போன்ற மரங்கள் அழிக்கப்பட்டு இலங்கையில் இயற்கை வனங்கள் வெறும் 20 % அளவில் சுருங்கி இருக்கின்றன. மீண்டும் காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்குவது மென்மேலும் இயற்கையை சினம் கொள்ள வைக்கும்.
மரங்களை அழிப்பதாக, தற்காலிக பொருளாதார நோக்கம் கொண்டதாக இருக்காமல் அழிக்கப்பட்ட மரங்களை உருவாக்கி எமது பெருளாதாரத்தை நிலையானதாக அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் பாதுகாப்பு தரும் நோக்கத்துடன் இருக்க வேண்டும்.
அழிந்து வரும் பெரு விருட்சங்கள் மீண்டும் துளிர்க்க வேண்டும்.
கருங்காலி தேக்கை விட விலை உயர்ந்தது. கருங்காலி மரத்தை பச்சைத் தங்கம் என்பார்கள்.கருங்காலிப் பயலே’ என்று எதற்கும் அசையாத உறுதி கொண்ட மனிதர்களையும்
„“கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி இருங்கதலித் தண்டுக்கு நாணும் “ என்று கருங்காலியைப் பற்றி பழந்தமிழ் பாடலில் ஔவையார் பாடியுள்ளார்.
#கருங்காலிக்கட்டை (#குச்சி)
#கருங்காலிமரம்
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்.
#ksrvoice,
#K_S_Radhakrishnan,
#கேஎஸ்ஆர்_போஸ்ட்
#KSR_Post
13-4-2023.
No comments:
Post a Comment