Thursday, April 27, 2023

#TamilNadu_Land_Consolidation (for Special Projects) - #Act_2023 #நீர்நிலைகள், #நீரோடைகள், #வாய்க்கால்கள்

#இயற்கைவள சுரண்டல் சட்டம் 
—————————————
தமிழக சட்டமன்றத்தில் மற்றொரு ஆபத்தான மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாக்கல் செய்து அது சட்டவடிவமாகியுள்ளது. இது பெரிதாக கவனத்துக்கு வரவில்லை.

ஏற்கெனவே 12 மணி நேர வேலை தொழிலாளர் திருத்தச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் திரும்பப் பெறவில்லை. கடந்த ஏப்ரல் 21, 2023 அன்று நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால்கள் அமைந்துள்ள 100 ஏக்கருக்கு குறைவான நிலங்களை சிறப்புத் திட்டம் (Tamil Nadu Land Consolidation (for Special Projects - Act, 2023)  என்ற பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒருங்கிணைத்துக் கொடுக்கலாம் என்று ஓர் ஆபத்தான மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகி
யுள்ளது. 

 இந்த சிறப்புத் திட்டத்தால் நீர் நிலைகள் அழிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். தொழிற்சாலைகள், வியாபாரமால்கள் கட்டுவதற்கு அந்த நிலங்களின் உரிமையாளரோ, அரசோ அவர்களின் விருப்பம் போல நிலங்களைப் பயன்படுத்தலாம். இது நீர் வரத்துகளில், நீர்நிலைகளில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்  இயற்கை வள சுரண்டல் சட்டமாகும். ஏற்கெனவே 65 ஆயிரம் நீர்நிலைகள் இருந்த தமிழ்நாட்டில் 30 ஆயிரம் நீர்நிலைகள்தாம்  இருக்கின்றன. அதில் வீடுகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், வியாபார மால்கள் என்று கட்டி சமூக விரோதிகள் நாசம் செய்துவிட்டார்கள். 

மேலும் அந்தக் கொடுமையை அதிகரிக்கும் வகையில்தான் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். 
 இந்த நுணுக்கமான விஷயங்களை அறிந்து சொல்ல யாரும் இந்த அரசாங்கத்தில் இல்லையா? தகுதியே தடை என்கிற நிலையில் தானே திமுக இதுவரை இயங்கி வருகிறது. என்ன சொல்ல? முதல்வர் ஸ்டாலினுக்கே வெளிச்சம்.

#TamilNadu_Land_Consolidation (for Special Projects) - #Act_2023
#நீர்நிலைகள், #நீரோடைகள், #வாய்க்கால்கள் 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-4-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...