Friday, April 7, 2023

தொலைக்காட்சி விவாதங்கள்…

தொலைக்காட்சி விவாதங்களில் முகத்தைக் காட்டி, நாகரிகமில்லாத வார்த்தைகளைப் பிரயோகித்து, வேண்டும் என்றே தன்னைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டும் என்பதற்காக அமளியை உருவாக்கும் ஒரு சிலர், பொது வெளியில் நடந்து  கொள்வதும் மோசமாக இருக்கிறது.
 
பொதுவெளியில் காவல்துறையினரை மிரட்டுவது, நான் யார் தெரியுமா? என்று கேட்பது, காவலர்களின்  பூட்ஸ் அணிந்த கால்களின் மீது இருசக்கர வாகனங்களை ஏற்றுவது, ஆளும் கட்சியைச் சார்ந்த நபர்களின் பெயர்களைக் கூறுவது, இப்படித் திமிர்த்தனமாகச் செய்வது எல்லாம் ஒருவிதமான காலித்தனம்தான். 
 
பொதுவெளியில் அனைவருக்கும் முகத்தின் முகவரி தெரியும் என்பதற்காக  எது வேண்டுமானாலும் செய்யலாம்  என்று நினைப்பது நல்லதல்ல. முதலமைச்சரின்  அதிகாரத்தின்  கீழ் உள்ள காவல்துறையை மிரட்டுவதை ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகக் கருதி முளையிலேயே  கிள்ளிவிட வேண்டும். தொலைக்காட்சி விவாதத்தில் பேசி விட்டால்கொம்பு ஒன்றும்முளைத்து விடுவ
தில்லை. இதுவும் ஒரு ரௌடியிசம்தான்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...