தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.04.2023) சட்டமன்றத்தில் பேசியபோது, தமிழகம் அமைதியான மாநிலம் அமைந்திருக்கிறது என்று கூறியிருந்தார்.
“தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை, இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் வருகிறது’’ என்று பேசியிருக்கிறார்.
முதல்வர் கூறியபடியே அமைதியான மாநிலமாக தமிழ்நாடு இருந்தால் நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் செய்தித்தாள்களில் இதற்கு மாறாக ஏற்கெனவே வெளி வந்த பல செய்திகள் நம்மை யோசிக்க வைக்கின்றன என்பதை சொல்லியே ஆக வேண்டும்.
இதுதான் அமைதிப் பூங்கா... திராவிட மாடல்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் அவருடைய மகன் பென்னிக்சும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களாலும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினராலும் தாக்கப்பட்டனர்.
2020 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இரவு 9 மணிக்கு பென்னிக்ஸ் மரணமடைந்தார். நுரையீரலில் ஏற்பட்ட காயத்தால் ஜூன் 23ஆம் தேதி காலை 5.40 மணிக்கு ஜெயராஜும் மரணமடைந்தார்.
இதுதொடர்பாக அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் சந்தேகத்திற்குரிய வகையில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘லாக்அப்’ மர்ம மரணங்கள், நீதிமன்றக் காவலிலும் நடக்கின்றன எனில், அதற்கு உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
“மிக மோசமாக, மனித தன்மையே இல்லாமல் தாக்கப்பட்டு இருவர் இறந்துள்ளனர். இந்த நிலை இனிமேல் வேறு எந்த குடும்பத்துக்கும் வரக்கூடாது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதனை கொலையாகவே கருத வேண்டும். காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்’’ என்றார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
அதிமுக ஆட்சி நடக்கும்போது இப்படி நியாயம் பேசிய இவர்களின் ஆட்சியிலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும், இவர்களுடைய ஆட்சியில் காவல்துறையினரால் மக்கள் தாக்கப்படுவதில்லை; மக்களுக்கு எந்தப் பாதிப்புமே இல்லை என்பதைப் போலத்தான் தமிழக முதல் அமைச்சர் சட்டசபையில் இன்று (21.04.2023) பேசிய பேச்சு அமைந்திருக்கிறது.
“ தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை, இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும். இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான் புதிய தொழிற்சாலைகள் வருகின்றன.
புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் வருகிறது’’பேசியிருக்கிறார். ஆனால் உண்மை நிலை என்ன என்பதை சற்று ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பின்னர் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களின் பட்டியல்:
• கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் 45 வயதுடைய சட்டி இந்திர பிரசாத் 2021 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி உயிரிழந்தார்.
• தஞ்சாவூர் மாவட்டம் மேற்கு காவல்நிலையத்தில் 35 வயதுடைய சத்யவாணன் என்பவர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி உயிரிழந்தார்.
• நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் 42 வயதுடைய மணிகண்டன் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி உயிரிழந்தார்.
• ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்நிலையத்தில் 19 வயதுடைய மணிகண்டன் 2021 டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி உயிரிழந்தார்.
• நாமக்கல் மாவட்டம் கிளைச்சிறை காவல்நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி45 வயதுடைய பிரபாகரன் உயிரிழந்தார்.
• திருநெல்வேலி மாவட்டம் ஹை கிரவுண்ட் காவல்நிலையத்தில் 44 வயதுடைய சுலைமான் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி உயிரிழந்தார்.
• திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல்நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி 38 வயதுடைய தடிவீரன் என்பவர் உயிரிழந்தார்.
• சென்னை தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் 25 வயதுடைய விக்னேஷ் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி உயிரிழந்தார்.
• திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி மரணமடைந்தார்.
அமைதிப் பூங்கா என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிற தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
நாகப்பட்டினம் மாவட்டம் இருக்கை கிராமத்தைச் சேர்ந்த முபாரக் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எருக்கம்பட்டு மலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலச் செயலாளரும், சமூக ஆர்வலருமான வசீம் அக்ரம் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த காட்டுராஜா மற்றும் அவரது மனைவி காசியம்மாள் எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், கீழச்செவலைச் சேர்ந்த சங்கரசுப்ரமணியன் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே மாரியப்பன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கலவரங்களும் சாதிமோதல்களும் நடந்திருக்கின்றன.
கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் கலவரம் வெடித்தது. சம்பந்தப்பட்ட பள்ளியின் கட்டடங்கள் தாக்கப்பட்டன. சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதுமட்டுமல்ல, வேங்கைவயல் தொடங்கி கடலூர் வரை பல சாதி மோதல்களும் அரங்கேறியுள்ளன.
சமீபத்தில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்களின் பற்களை கட்டிங் பிளேயரால் பிடுங்குவது, வாய்க்குள் ஜல்லி கற்களை கொட்டி பல்லை உடைப்பது, அவர்களின் விதைப்பையை நசுக்குவது உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவர் தற்போது சஸ்பெண்ட செய்யப்பட்டு இருக்கிறார்.
முதல்வர் சொல்வதை மீண்டும் படியுங்கள்:

புதிய முதலீடுகள் வருகின்றன. புதிய நிறுவனங்கள் வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் வருகிறது’’
நடந்த உண்மைகள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல பேசுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? முதல்வர் ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-4-2023.
No comments:
Post a Comment