‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நிலையில்…….;
இந்து கடவுளான திருவேங்கடவனை திட்டித் தீர்ப்பார்கள். மற்ற கடவுள்களையும் திட்டித் தீர்ப்பார்கள். இப்படியான படத்தின் முன் தன் பணிகளை கனிமொழி அவர்கள் ஆற்றுகின்றார். வாழ்க அவருடைய கோட்பாடு, செயல்பாடு. இது ஏதோ தூத்துக்குடி கட்சி நிர்வாக அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த கட்சி நிர்வாக அலுவலகத்தில் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பணியை ஆற்றுகின்றார். உண்மையிலேயே இவர் பெரியாரின் இறைமறுப்புக் கொள்கையில்தான் உறுதியாக இருக்கின்றாரா? இது அவருக்கே வெளிச்சம்.
கனிமொழி இதுவரை கடவுள் இல்லை; மதங்கள் இல்லை என்று சொல்லிக் கொண்டு வருபவர். கலைஞர், ஸ்டாலின் படங்களோடு மதச்சின்னத்தை வைத்துள்ள ஒரு கட்சி அலுவலகத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் அவருடைய கருத்துக்கே அவர் முரணானவரா? கடவுள் மறுப்புக் கொள்கையில் பெரிய உறுதிப்பாடு இருப்பது மாதிரி பேசியவருடைய அணுகுமுறை இவ்வளவுதானா?
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-4-2024
No comments:
Post a Comment