Sunday, April 9, 2023

ராகுல் சாங்கிருத்தியாயன்-வால்கா முதல் கங்கைவரை

வால்கா முதல் கங்கைவரை முத்தையா என்பவரால் தமிழில் முதன்முதலாக மொழிபெயர்க்கப்பட்டது. அதன்பின் பல மொழிபெயர்ப்பில் 40-க்கும் மேற்பட்ட பதிப்பைக் கண்டுள்ளது. மேலும் இந்த புத்தகம் பல இந்திய மொழிகளில் வெளிவந்துள்ளது.

கி.மு.6000 முதல் இரண்டாம் உலகப்போர் நடக்கின்ற காலம் வரையிலான மனிதகுல வரலாற்றை மார்க்சியம் அல்லது பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் விளக்குகிற நூல் தான் வால்கா முதல் கங்கை வரை. இந்த நூல் தமிழில் மட்டும் 1954 லிருந்து 2009 வரை 28 பதிப்புகள் போடப்பட்டிருக்கிறது. 






வால்கா முதல் கங்கை வரை நூலில் மனிதகுல வரலாற்றை 20 கதைகளில் விளக்குகிறார் ராகுல் சாங்கிருத்யாயன். குகைகளில் வாழ்ந்த மனித இனம், அப்போது பேச்சு என்பதே இல்லை. அதன் இன்னொரு வடிவமான எழுத்து தோன்றியே 5000 வருடங்கள் தான் இருக்கும். வால்கா நதிக்கரையில் இருந்து தொடங்கும் கதை கங்கை கரையில் முடியும்.



ஆரியர் ஊடுருவல், இஸ்லாமியர் கலப்பு ,ஆங்கிலேயர் வருகை எனப் படிப்படியாக விரித்துச் செல்வார். கி.பி.1942-ம் ஆண்டு காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்துடனும், இரண்டாம் உலகப்போர் (1939-1945) நடந்துகொண்டிருக்கும் காலத்திலும் அந்த நூல் முடிவடைகிறது.

உலக வரலாற்றையும், சமூகங்களையும், அரசியலையும் தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய நூல் வால்கா முதல் கங்கை வரை.

”வால்கா முதல் கங்கை வரை” தமிழில் வெளிவந்த சில தினங்களுக்குப் பின் அறிஞர் அண்ணா, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் கூட்டம் ஒன்றில், ”ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்; நல்ல தமிழில் எழுதப்பட்டிருக்கிறது” என்று பாராட்டி இந்நூலை அறிமுகம் செய்தார்.

சாகித்திய அகாதமி மற்றும் பத்மபூஷன் விருது
1958-ம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்திய அகாதமி விருது, மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் நேருவின் கையிலிருந்து சாகித்திய அகாதமி விருதைப் பெறும் ராகுல் சாங்கிருத்யாயன்
முன்னாள் பிரதமர் நேருவின் கையிலிருந்து சாகித்திய அகாதமி விருதைப் பெறும் ராகுல் சாங்கிருத்யாயன்
லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் இந்திய தத்துவவியல் பேராசிரியர்
இராகுல்ஜி முறைப்படி கல்வி நிலையம் சென்று படிக்காதவர் என்றபோதும்  அவரது தேடலாலும் உழைப்பாலும் தத்துவம் மற்றும் வரலாற்றுத் துறையில் தவிர்க்க முடியாத அறிஞரானார். அதனால் தான் சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்திய தத்துவவியல் பேராசிரியராக நியமித்தது.தமிழகம் வந்தார். திருமழிசையில் தங்கினார்.தமிழை விரும்பி அதை குறித்து படிக்கவும் அறியவும் முற்பட்டதுண்டு.

மனித சமுதாயத்தின் ஞானக் களஞ்சியமாக விளங்கியவர். ராகுல்ஜி 1963 ஏப்ரல் 14 அன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் மரணம் அடைந்தார். 

ராகுல்ஜி பெயரில் வழங்கப்படும் விருதுகள்
இந்திய அரசு மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன் தேசிய விருது, மகா பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன் சுற்றுலா விருது ஆகிய விருதுகளை ராகுல் சாங்கிருத்தியாயன் பெயரால் வழங்குகிறது.

ராகுல் சாங்கிருத்தியாயன் பிறந்தநாள் இன்று.
9-4-2023

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...