#நாய்கள் குரைத்து கொண்டுதான்இருக்கும்....
ஒரு கருத்தை ஆய்வு செய்து சொல்கிறேன். அந்தக் கருத்துக்கு கீழ்தரமாக இல்லாமல் ஆக்கபூர்மாக, ஆரோக்கியமாக எதிர்ப்பு வலுக்கிறது அல்லது மாற்றுக்கருத்துகள், விமர்சனங்கள் வருகின்றன எனில் கருத்தியல் தளத்தில் அவற்றுக்குப் சரியாக பதிலளிக்கலாம், விவாதங்கள் செய்யலாம், மேலும் ஆணித்தரமாக எனது தரப்பை நிறுவ முயலலாம். இது அவசியமாக வரவேற்கலாம்.ஆனால், என்னைப் பற்றியோ திட்டமிட்டு சில முட்டாள்கள் எதுவும் அறியாமல் கடுமையான தவறான விமர்சனங்களும் வைக்கின்றனர்.எனில், அவை அவதூறாக இல்லாத பட்சத்தில், என்னைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு நேரடியாகக் களமிறங்கி எனக்கு நானே வக்காலத்து வாங்குவது மாண்பாகாது.
எத்தனை கீழ்த்தரமான உள்நோக்கம் கொண்ட விமர்சனமாக இருப்பினும் அந்தரங்கமாக அதனைப் பரிசீலித்து ஒரு முடிவுக்கு வரலாமே தவிர பொதுவில் கோதாவில் இறங்கி புரிதல் அற்ற மொடுமுட்டி எதிராளியோடு மல்லுக்கட்டினால் நமது தகுதியை,நற்பெயரைக் கெடுத்துக்கொள்ளும் வாய்ப்புகளே அதிகம். ஒன்று, விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு மௌனமாகக் கடந்துசெல்லும் பக்குவம் வேண்டும். இல்லாவிட்டால், அதை இடதுகையால் புறந்தள்ளும் செருக்கு வேண்டும். போங்கடா போக்கற்ற பசங்களா என அலட்சியமாக கடந்து செல்ல வேண்டும். நாய்கள் குரைத்து கொண்டுதான் இருக்கும்....
No comments:
Post a Comment