Friday, April 14, 2023

சீர்மிகு சித்திரைமகளே வருக!

https://youtu.be/BfoOVRmIeKU

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று - 
நீவிர் 
எண்ணமதைத்  திண்ணமுற இசைத்துக்கொண்டு,
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர், 
தீமையெல்லாம் ஓடிப்போம்,  திரும்பி வாரா..!"
- பாரதி.

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
****
சித்திரைமகளே வருக!



சிறப்பான வாழ்வைத் தருக! 
செம்மார்ந்த செயல்கள் பெருகி 
செழித்திட நாளும் அருள்க!

வருக! சோபகிருதே வருக!
விளைச்சல் நாளும் பெருக
விவசாயி வாழ்வு செழிக்க
விண்மாரி வேண்டுவன தருக!

வல்லமை கொண்ட வாழ்கை
வளமோடு நாளும் சிறக்க
வேண்டி நிற்கும் நல்மனிதர்
வேண்டுவன எல்லாம் அருள்க!

பாரெங்கும் பசுமை செழிக்க
பாலையிலும் குளிர்ச்சி பெருக
பாட்டாளிகள் உள்ளம் நிறைய
பாங்காக நல்லாசி அருள்க!

மழைதிரள் முகில் கூட்டமாய்
மகிழ்ச்சி மனதில் முகிழ
மலர்ச்சிப் பூக்கள் விரியும்
மதிமுகம் நாளும் அருள்க!

நித்தமும் மக்கள் வாழ்வு
நிம்மதி கொண்டு சிறக்க
நனிமிகு உள்ளம் கொண்டோர்
நாடாள நல்லாசி அருள்க!

- வானதி சந்திரசேகரன்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...