Tuesday, April 4, 2023

#மனோன்மணீயம்_பெ_சுந்தரனார்_பிறந்தநாள். ஏப்ரல் 4, 1855 -

#மனோன்மணீயம்_பெ_சுந்தரனார்_பிறந்தநாள். *திருத்தம் செய்யப்படாத முழுமையான தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்* ஏப்ரல் 4, 1855 -
—————————————
*திருத்தம் செய்யப்படாத முழுமையான தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்*

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"

https://m.facebook.com/story.php?story_fbid=1112578909524520&id=100023172647377&mibextid=Nif5oz
****

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் துணி வணிகம் செய்த பெருமாள் என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855-ஆம் ஆண்டு  ஏப்ரல் 4 ந்தேதி சுந்தரனார் பிறந்தார் . திருவிதாங்கூர் சமஸ்தானம் ஐரோப்பாவுடன் வாணிகம் செய்ய உருவாக்கிய சிறு துறைமுக நகரம் ஆலப்புழை. சுந்தரனாரின் முன்னோர் நெசவுத் தொழில் செய்த மக்களுக்குச் சலுகை கொடுக்கப் பட்டதால் ஆலப் புழைக்குக் குடி பெயர்ந்த வேளாளர் குடும்பங்களில் ஒன்று என்று அ.கா.பெருமாள் கூறுகிறார். 
ஆலப்புழையில் பெ.சுந்தரனார் தொடக்கப் படிப்பைத் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், மெட்ரிக் குலேசன் படிப்பை ஆங்கில வெர்னாக்குலர் பள்ளியிலும் முடித்தார் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில், 1871-இல், அதாவது தமது 21வது வயதில் இளங்கலைப் பட்டத்தையும், 1880ஆம் ஆண்டு, அதாவது 25வது வயதில் முதுகலைப் பட்டத்தையும் தத்துவத்தில் பெற்றார்
இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவருக்குத் தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமி. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876-ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்
ஆசிரியப் பணி 1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார்.  பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வித் துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. 
   மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வித் துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரனாரைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்படத் தாங்கினார் பேராசிரியர் சுந்தரனார் தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது.. 1878 இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசன் பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.                                                           சமயப்பணி திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.
தமிழ்ப்பணி ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது.  சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது. கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்  சுந்தரனார் 1877-78-இல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம் பிரம்ம கீதை, சூதசம்ஹிதை, பெருந்திரட்டு ஆகியவை காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் "பரமாத்துவித" என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தை எழுதினார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இதனை எழுதினார். உ.வே.சாமிநாதையரிடம் கொடுத்துத் திருத்தங்கள் செய்து கொண்டார்.
இந்த நாடகம், பல்கலைக் கழகப் பாடநூலாகவும் கற்பிக்கப்பட்டது. அத்தோடு இந்த நூலில் இடம் பெற்றுள்ள "நீராருங் கடலுடுத்த நிலமடந்தை" என்ற பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழகம், மற்றும் அனைத்துத் தமிழர் வாழும் இடங்களில் ஒலிக்கிறது

- மனோன்மணியம் சுந்தரனார் பாடிய முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்து. பேராசிரியர் சுந்தரனார் தமது 42வது வயதில் 1897, 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.


#கே௭ஸ்ஆர்_போஸ்ட்
#KSR_Post
4-4-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...