தமிழகத்தில் திமுக அரசு உள்ளிட்ட 5 மாநில அரசுகள் தனது அதிகாரத்தை இழக்கவுள்ளது. இதனையடுத்து தேர்தல் முடியும் வரை காபந்து அரசு தான் செயல்பாட்டில் இருக்கும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிறகு அமையவுள்ள அரசு தான் புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட முடியும். எனவே தற்போதுள்ள முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் என அனைவரும் இன்று மாலை அதிகாரத்தை இழக்கவுள்ளனர். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி நாளாகவே இன்றைய தினம் பார்க்கப்படுகிறது.
காபந்து அரசாக மாறும் தமிழக அரசு கடந்த 7.5.2021 அன்று பொறுப்பேற்ற திமுக அரசு பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தி வந்தது. இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசிடம் உள்ள அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். இதனையடுத்து தற்போதுள்ள திமுக அரசு, காபந்து அரசாக மாறிவிடும். காபந்து அரசு அமலுக்கு வந்த பிறகு முதமைச்சர், அமைச்சர்கள் என யாரும் தலைமைச் செயலகத்திற்கு வந்து அரசு அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொள்ள முடியாது. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் முக்கிய திட்டங்களை அறிவிக்கவும் முடியாது. இது மட்டுமில்லாமல் யாரும் அரசு வாகனங்களை பயன்படுத்த முடியாது. முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை தங்களுக்கான வாகனங்களை தலைமைச் செயலகத்தில் விட்டுவிட வேண்டும். அதே நேரத்தில் ஏதாவது மிக முக்கிய பிரச்சினை என்றால் மட்டுமே அரசு உயர் அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் ஆலோசனை நடத்தலாம். அப்படித்தான் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக அரசு காபந்து அரசாக மாறிய நிலையில், கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருந்தது. சாதனை,புகைப்படங்கள் அகற்றப்படும் எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டு அரசு அதிகாரிகளோடு கூட்டங்கள் நடைபெற்றது. எனவே அந்த முறையே தற்போதும் பின்பற்றப்படும், மேலும் தலைமைசெயலகத்தில் அரசின் சார்பாக வைக்கப்பட்டுள்ள சாதனைகளை கூறும் விளக்கப்படங்கள், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு தேர்தல் தொடர்பான தகவல்கள் மட்டும் இடம்பெற்றிருக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment