#தேர்தல்முடிந்தது! இன்று சென்னை வந்து சேர்ந்தேன்!. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் பத்து நாட்கள் இருக்கிறது! நேற்று ஒரு ரூபா கூட வாங்காமல் ஒட்டு போட்டவர்கள்தான் மானமுள்ள வாக்காளார்கள்.. ஜனநாயகத்தை காத்தவர்கள்!
இந்தப் பத்து நாட்களைப் பயன்படுத்தி சில புத்தகங்களை வாசிக்கலாம் என்று இருக்கிறேன். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் எழுதிய “மை ஸ்டோரி ஆப் லைப்” ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் எழுத்துக்கள் அடங்கிய தொகுப்பு சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் எழுத்துக்கள், திரும்ப வாசிக்க Reminiscences of the Nehru Age- Mathai மற்றும் கு அழகிரி சாமியின் சிறுகதைகள் போன்றவற்றை ஓய்வு நேரங்களில் வாசிக்கவும் சில நேரம் தனி பயணத்தில் எடுத்துச் செல்லவும் இருக்கிறேன். வாழ்வும் அதன் கதியும் நமது வேலைகளும் அதன் போக்கில் இருக்கின்றன. தேச நன்மைகளுக்கோ தொலைதூர விவசாய மக்களின் அன்றாடங்களுக்கோ நாம் அரசியல் பூர்வமாகச் செயல்பட்டாலும் சிலர் குறுக்கு வழியில் தங்களின் சுயநலன்களுக்காக அரசியலை வணிகமாக்கி மக்களிடமே பேரம் பேச முனைகிறார்கள்.. அப்படியான மனோநிலையோ செயல்பாடுகளோ நமக்குத் தேவையில்லை. எல்லாம் அரசியல் ஆகிவிட்ட பிறகு அதில் முடிந்த அளவுக்கு கண்ணியத்துடன் ஈடுபட்டு மக்களின் கவனத்தைக் கவர்ந்து அவர்களுக்கான வேலைகளை செய்வதில் மனம் உவந்து இருப்பது தான் வாழ்க்கை என்று தேர்ந்து கொண்டாயிற்று! கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெறுவது கூட முக்கியமில்லை! எத்தனை ரன் எடுத்தார்கள் என்று தான் கேட்பார்கள்! ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டே இருப்போம்! கால நேரங்கள் பொருந்தி வர வேண்டும். என்னைக் கேட்டால் மற்றவர்களைப் போல இந்த அரசியலில் கால்களை நக்கி கொண்டு முதுகைச் சொரிந்தால்தான் வாய்ப்பு எனும்போது கேவலமான அந்த அவலத்திற்கு நாம் பலியாகி விடக்கூடாது! அவர்கள் நம்மை வெளித்தள்ள முயன்றால் நாமும் அவர்களை வெளித்தள்ளிவிட்டுச் செல்ல வேண்டும் இல்லையா? பதவிக்காகவும் ஆதாயத்திற்காகவும் எந்த நாளும் எந்த முடிவும் எடுத்ததில்லை! உடனே என்னை “அங்கே போனார் இங்கே போனார்” என்று சொல்லித் திரிவார்கள். மற்றவர்கள் போல ஆதாயத்திற்காக கால் நக்கிக் கொண்டு ஆதாயத்திற்காக கூட்டாணி மாற்றி அங்கு இங்கு என சகஜமாக செல்வர்களைதான் நீங்கள் பேச வேண்டும். என்னை அல்ல….. தன் சொந்த கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் சுயமரியாதை இழந்து பணத்திற்காக பதவிக்காக வாழ வேண்டிய அவசியம் எப்போதும் எனக்கு இல்லை. பணப்பெட்டிகளை வாங்கிக் கொண்டு கூட்டணி அங்கே சேரலாமா இங்கே சேரலாமா எனக் குதிரைபேரத்தில் ஈடுபடும் இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் இல்லை. மோசமான ஊழல்வாதிகள்! அதில் வரும் கொள்ளையில் பங்கு போட்டுக் கொண்டு தங்கள் குடும்ப நலனுக்காக திரிபவர்களுக்கிடையே நான் எப்பொழுதும் நேர்மையான அரசியல்வாதி தான்! #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
இன்னும் கிராமத்தில் கடந்த அறுபது ஆண்டுகளின் மேலான எச்சமாக இருக்கும் எச்சமான குருசாமி செட்டியாரினசின்ன கடையின் வாசலில் நின்று,
இன்னும் கிராமத்தில் கடந்த அறுபது ஆண்டுகளின் மேலான எச்சமாக இருக்கும் எச்சமான குருசாமி செட்டியாரினசின்ன கடையின் வாசலில் நின்று, வாழ்க்கையின்...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment