Monday, May 25, 2026

#திருநெல்வேலிமாவட்ட பழைய #நிலஅளவை முறை!

 #திருநெல்வேலிமாவட்ட பழைய #நிலஅளவை முறை!

1. இன்றைய விருதுநகர் சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, தூத்துக்குடி,திருநெல்வேலி,அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளெல்லாம் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் அடங்கும். இங்கு இருக்கின்ற நில அளவை முறை தஞ்சாவூர் விட கோவையை விட வித்தியாசமானது. பிற பகுதிகளில் இருப்பது போல இங்கே நில அளவை முறை இல்லை என்றே சொல்லலாம் ஆக தனித்துவமாகவே இருக்கிறது திருநெல்வேலி பழைய நில அளவை முறை. 2. வெறும் அடி, சதுர அடி போன்ற கணித அடிப்படையில் மட்டும் இல்லாமல், “விதை போட வேண்டிய அளவு” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு விதை என்ற பெயரிலேயே நிலத்தை அளப்பது திருநெல்வேலி காரர்களின் பழக்க நடைமுறையாக இருந்தது. இங்கு பயன்படுத்தப்பட்ட அடிப்படை அளவு “தச்சுக் கோல்” (tutcha-cole) ஆகும். இது சுமார் 33 அங்குலம் நீளமுடையதாக இருந்தது. இதன் அடிப்படையில் தான் மற்ற அளவுகள் உருவாக்கப்பட்டன. மேலும் “நாட்டு அடி” (country foot) என்ற அளவும் இருந்தது. இது இன்றைய 12 அங்குல அடி அல்ல; சுமார் 10.18 அங்குலம் மட்டுமே. இதனால் அந்த அடியை வைத்து கணக்கிடப்பட்ட நில அளவுகள் மற்ற மாவட்டங்களுடன் பொருந்தாமல் மாறுபட்டன. புன்செய் நிலங்களுக்கான அளவீடு “சங்கிலி” அல்லது “செயின்” (chain) அடிப்படையில் இருந்தது. 3. மேலும் 4 தச்சுக் கோல்கள் சேர்ந்து ஒரு கைத்தடி (rod) ஆனது. அதன் நீளம் சுமார் 12 அடி. ஆகும் இந்த கைத்தடி அடிப்படையில் அதாவது 12 அடி கைத்தடி அடிப்படையில் 32 கைத்தடி கொண்ட சதுரம் ஒரு “செயின்” அளவாக இருந்தது. செயின் என்றாலே சங்கிலி என்று நாம் சொல்வோம் ஆனால் திருநெல்வேலி பகுதியில் செயின் அளவு கோலால் நில அளவை செய்யப்பட்டது ஆகும். மேற் சொன்னபடி 32 கைத்தடி சதுரம் என்பது 147 456 சதுர அடி வருகிறது அது சுமார் 3.36 ஏக்கருக்கும் சமமாகவும் இருந்தது. இதனால் புன்செய் நிலங்களில் இது போன்ற பெரிய அளவுகள் அளக்கப்பட்டன. 4. இதுவே நல்ல பாசன நிலங்களில் முற்றிலும் வேறு முறை பயன்படுத்தப்பட்டது. இங்கு “புட்டி” (puddy) அல்லது “நாழி” (nauzhy) என்ற அளவு பயன்படுத்தப்பட்டது. இங்கு ஒரு கைத்தடி சுமார் 20 அடி அதனை சதுரமாக எடுத்தால், அதன் பரப்பளவு 400 சதுர அடியாகும். இதுவே ஒரு “புட்டி” நிலமாகக் கருதப்பட்டது. இதன் முக்கியமான தன்மை என்னவென்றால், இந்த அளவு அந்த நிலத்தில் ஒரு புட்டி விதை போட வேண்டிய அளவை அடிப்படையாகக் கொண்டது. இந்த புட்டி அளவுகள் சேர்ந்து பெரிய அளவுகளாக மாற்றப்பட்டன. 8 புட்டிகள் சேர்ந்து ஒரு மரக்கால் (merosal) அல்லது “குருணி” ஆகும். ஆக ஒரு குருணி அதன் பரப்பளவு சுமார் 3,200 சதுர அடி.பரப்பளவு கொண்டதாகும் மேலும் 21மரக்கால் சேர்ந்து ஒரு “விதை கொட்டை” (seed cottay) ஆனது. இது சுமார் 70,000 சதுர அடியாகவும், சுமார் 1.62 ஏக்கருக்கும் சமமாகவும் இருந்தது. 5. ஆக புட்டி” என்பது ஒரு நில அளவு மட்டுமல்ல; அது விதை அளவுடன் நேரடியாக தொடர்புடையது. ஒரு புட்டி நிலம் என்றால், அந்த நிலத்தில் ஒரு புட்டி விதை போதுமானதாக இருக்கும். அதுபோல மரக்கால் என்பதும் குருணி என்பதும் விதை கோட்டை என்பதும் விதை அளவு அளவுடன் ஒத்துப் போவதை சொல்கிறது. அந்த விதை அளவு எவ்வளவு பரப்பில் நிலம் பிடிக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது திருநெல்வேலியில் பெரிய அளவில் காணி என்ற பரப்பு பயன்படுத்தப்படவில்லை. அப்படி பயன்படுத்து இருந்தால் அவர்கள் திருநெல்வேலி கிறிஸ்தவ மிஷனரிகளாக இருந்து அல்லது வெள்ளையர்களால் அவர்களுடைய நிலங்கள் அளக்கப்பட்டு அவர்கள் செங்கல்பட்டு அளவு முறையை ஒரு சில இடங்களில் அமுல் படுத்தி இருந்தார்கள். மற்றபடி திருநெல்வேலி காணி என்ற அளவு பெரிய அளவில் இல்லை.

No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...