Monday, May 25, 2026
#என்ஆர்_தியாகராஜன்
———————————-
தேனி நகரத்தை நிர்மாணித்த எனது உறவினர் என் ஆர் டி என்று அழைக்கப்படும் என் ஆர் தியாகராஜன் அந்த வட்டாரத்தில் அக்காலத்தில் பிரசித்தி பெற்ற மாபெரும் காங்கிரஸ் தலைவர். மதுரை மாவட்டக் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர் ! அவர் பழ.நெடுமாறன் அவர்களின் அரசியல் முன்னோடி.அவரின் பிறந்தநாள் இன்று.!
தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 1913இல் இதே நாளில் பிறந்தவர் தான் என் ஆர் தியாகராஜன்!! பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்த இவர் காந்தியின் சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு அதில் பங்கேற்றார்!!பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக 1930 முதல் 1946 வரை நான்கு முறை கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவரும் கூட!
சுதந்திரத்திற்குப் பிறகு 1957ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் தேனித் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்! 1968இல் சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்வானார்! அப்போது தமிழகத்தில் நடந்த காங்கிரஸ் அரசின் முதல்வர் காமராஜரின் நண்பரான இவர் அவரது உதவியுடன் கொடைக்கானலைச் சுற்றுலாத்தலம் ஆக்கினார்!
தேனியில் அரசுப் பொது மருத்துவமனை மட்டுமல்லாமல் மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிகளையும் திறந்தவர்! பல கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி விவசாயிகளுக்குக் கடன் வழங்கி அவர்களை அரவணைத்தவர்!
தன் 56வது வயதில் 1969 ஏப்ரல் 27 இல் இந்த மண்ணை விட்டு மறைந்தார்! தேனி அரசு மருத்துவமனை! தேனியில் ஒரு சாலை! தேனி கோபாலபுரம் அரசு துவக்கப்பள்ளி ஆகியவற்றுக்கு இவரது பெயர் சூட்டி இது நாள் வரை கௌரவிக்கப்பட்டு இருக்கிறது.! இந்தப் பிறந்த நாளில்
என் ஆர் தியாகராஜன் அவர்களை நினைவு கூறுவது நமது அரசியல் குடிமையியல் வரலாற்றையும் நினைவு கூறுவதற்குச் சமமாகும்.
#என்ஆர்டி
#nrt
#தேனி
#theni
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
*இது ஆதங்கம் அல்ல*…..
*இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment