திட்டங்களை எல்லோரும் நாமெல்லாம் கூடிச்சேர்ந்து முயற்சி எடுத்து வளப்படுத்தினால் அதன் பலன்கள் பெரும்பாலமான நாய்க்கர் இன மக்களுக்கு மட்டுமல்ல சகலருக்கும் போய் சேரும்! என்பதுதானே உண்மை. ! இதையெல்லாம் வலிமையாக செயல்படுத்துவதற்கு நாயக்கர்கள் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ? குறைந்தபட்ச எண்ணிக்கைகளாகக் கூட இல்லை! இதையெல்லாம் தொடர்ந்து பேசி வந்த நான் 1989 இல் இருந்து இன்றுவரை வாய்ப்பு கிடைக்காமல் , வாய்ப்பு கிடைத்தும் தோற்கடிக்கப்பட்டேன். ஆனால் எனக்கென்ன வந்தது என்று இருந்திருக்க கூடாதா? அல்லது இருந்திருக்க முடியாதா ?1984 முதல் டெல்லிக்கு மட்டும் நூறு முறை மேற்கண்ட வழக்குகளுக்காக விமானத்தில் டிக்கெட் வாங்கி பயணம் செய்திருக்கிறேன். அன்றைக்கு எல்லாம் இவ்வளவு விமானங்கள் கிடையாது. யாருக்காக இவ்வளவு முயற்சி ? இந்த மண்ணில் வாழுகிற மக்களுக்காகத் தானே ? இந்த மண்ணில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்காக தானே? இவ்வளவு நாள் நான் பாடுபட்டு இருக்கிறேன்!. அதிலும் அதிகம் பலன் பெற்றவர்கள் நாயக்கர்கள் தான். விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கான வழக்குகளிலும் நான் பலமுறை ஆஜராகி உள்ளேன். இதையெல்லாம் எனக்காக ? என் தனிப்பட்ட வாழ்விற்காகவா ? வழக்குகளை தொடர்ந்தேன்.? இந்த மண்ணில் பிறந்தவன் சக மனிதர்களோடு வாழ்ந்தவன், நான் பிறந்த மண் ! இந்த வட்டாரம் வளம் பெறுவதற்காகத் தான் இத்தனை முயற்சிகளையும் செய்தேன்! நான் கேட்கிறேன்! இப்படியான முயற்சிகளை எல்லாம் அதிமுகவில் இருந்து, இப்போது திமுகவில் இருக்கக்கூடிய கே. கே .எஸ். ராமச்சந்திரன் போன்றவர்களாயினும் சரி செய்திருக்கிறார்களா? செய்வதற்கான முயற்சியையாவது எடுத்தார்களா? யாரும் , யாருமே செய்யவில்லையே ? இல்லை , இன்றைக்கு கூட்டணிக் கொடி பிடிக்கிற முன்பு ஆண்டகாங்கிரஸ்காரர்களாவது செய்தார்களா? எதுவுமே செய்யாமல், தேர்தல் வந்தால் மட்டும் உபயோகப்படுத்திக் கொள்கிற கருவேப்பிலையாக பயன்படுத்திக் கொள்கிற நிலைமையில் இந்த இனமானது இருக்கையில் பாஜகவும் அதிமுகவும் தெலுங்கர்களுக்கு விரோதமானவர்கள் என்று திமுக சித்தரிப்பதுவும், அதற்கு நம்மவர்களில் சிலர் கை தட்டுவதும், மிகவும் மோசடித்தனமானது உழவர் சங்கத்தலைவர் சி நாராயணசாமி நாயுடு அவர்களுக்குப்பின் நமது இன மக்களின் அரசியல் அஸ்திவாரம் இல்லாமல் போனது ஏன் .? இன்றைய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் யார்? நம்மைப் போன்ற தெலுங்கு பேசுபவர்கள் தான்! ஒருமுறை நெல்லை மாவட்டத்தில் நாயக்கர்கள் சார்பாக ஒரு வழக்கு ! பலருக்கு நிபந்தனை ஜாமின் யாரால் போட்டு விட்டார்கள்! ஒரு மாதம் காலம் வழக்கில் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் அத்தனை பேரையும் அழைத்து அவர்களுக்கு உணவளித்து வேண்டிய உதவிகளைச் செய்தார்! இது நடந்த உண்மை. அப்போது அவர் அமைச்சராக கூட இருக்கவில்லை! யார் தெலுங்கர்களுக்கு விரோதி? போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு போவது திமுக காரர்களின் பொதுப்புத்தி ! இவர்களின் விநாச காலப் புத்தியை அறிந்த பின்னரும், அவர்களை ஆதரிப்பதென்பது கொள்ளிக் கட்டையால் தன் தலையை தானே சொறிந்து கொள்வதற்குச் சமம். இன்றைக்கு அவதூறு பேசுகிறவர்களுக்கு ஒரு சவால் ! மனம் விட்டுப் பேசுவோம் ! நீங்களும் வாருங்கள் ! நானும் வருகிறேன் ! பேசி விவாதித்து பார்ப்போம் ! அப்போதுதான் உங்களுக்கு எதார்த்தம் தெரியும்!. உண்மையில் தெலுங்கர்களுக்கு விரோதி திமுகவும் காங்கிரசும் தான் ! வேண்டுமானால் தெலுங்கு பேசும் கே கே எஸ் ஆர் நாயக்கர்களை ஏமாற்றிப் பிழைப்பார்! நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் மேற்சொன்ன அனைத்தையும் நாயக்கர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு விளக்கத்தை தர வேண்டி இருக்கிறது! இதுவரை உங்களை ஏமாற்றுவதற்காகவே ஆட்சி அதிகாரங்கள் பயன் படுத்தப் படுகிறது. மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நல்லாசியுடன் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் சாத்தூர் தொகுதியில் நிற்பதாலே பிரித்தாளும் சூழ்ச்சி எனும் இந்த தந்திரங்களைப் பயன்படுத்தி சாத்தூரில் ஒரு சீட்டு தெலுங்கருக்குக் கொடுத்து வேடிக்கை பார்ப்பது என்கிற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் ! இதைத்தான் இன்று நாயக்கர் இன மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் சொல்கிறேன். நாளை நமக்காக , நம் இனத்திற்காக கோரிக்கைகளோடு பிரதமரைச் சந்திக்க வேண்டுமென நினைத்தால், திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் அதனைச் செய்து முடிப்பார். என்பதனை ஞாபகத்தில் வையுங்கள். யார் யாருக்கு துரோகம் செய்கிறார் ? என்று நாயக்கர் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் !. 1998 ல் ஜெயலலிதாவாகப் பார்த்து எனக்கு என் தகுதிக்கு, என் நட்புக்குக் கொடுத்த
Subscribe to:
Post Comments (Atom)
*இது ஆதங்கம் அல்ல*…..
*இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment