Monday, May 25, 2026

சாத்தூர் தொகுதியை அடுத்துள்ள PSR

சாத்தூர் தொகுதியை அடுத்துள்ள PSR கல்லூரியில் எதோ பாரதிய ஜனதாக்கட்சி தூண்டிவிட்டு அங்கே வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள் என்று ஒரு பொய் பிரச்சாரத்தை மேலும் தவறான ஒரு கருத்தை சிலர் பரப்பி வருகிறார்கள்! நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்! பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின் உறவினர் ஒருவர் நெல்லையில் இருக்கிறார்!அவர் ஒரு பிரபல தொழிலதிபர்!! அவரது வீட்டிலும் நேற்று வருமானவரி துறையினர் ரெய்ட் நடத்தி கணக்கில் வராத ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்திருக்கிறார்கள். நயினார் அவர்களின் உறவினர் வீட்டிலேயே இந்தச் சோதனை நடந்துள்ளது. இம்மாதிரி சோதனைகளுக்கும் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? ஏனெனில் நெல்லையில் அவரது சொந்த உறவினர் வீட்டிலேயே இந்தச் சோதனை நடந்திருக்கிறதே? இது வருமானவரித்துறையினர் வழக்கமாக நடத்தும் சோதனைதான்! இதை பாஜக தான் தூண்டிவிட்டுச் செய்வதாகச் சொல்வது தவறான அதாவது வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தை தின்றால் பித்தம் தீரும் என்பவர்கள் இது மாதிரி பொய்ப் பிரச்சாரங்களைச் செய்யும் மூடர்கள் அரசியலில் அநாகரிகம் மிகுந்தவர்கள்! நேர்மையற்றவர்கள் செய்யும் இந்த கேவலமான தந்திரங்களைப் நாம் முறியடித்துத் தான் ஆக வேண்டும்! மாநில பாஜக தலைவரின் உறவினர் வீட்டிலேயே ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றால் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதில் தலையிட்டு தன் அதிகாரத்தைக் காட்டி இருக்க முடியாதா? அது அவர் வேலை அல்ல! அவரை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்! இது மாதிரியான விஷயங்களில் அவர் தேச நலனைத் தான் விரும்புவார்! யார் யாரோ கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டு பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வருமான வரித்துறையை ஏய்த்து வருகிறார்கள்!அவர்களைப் பொது வெளியில் அடையாளப்படுத்துவதை விட்டு விட்டு தேர்தல் நேரத்தில் வந்து இம்மாதிரியான அவதூறுகளைச் சுமத்துவது அற்பத்தனத்தின் வெளிப்பாடுதான். தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டிய கதைதான்.! #itraid #satturconstuency #bjp #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்



No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...