Monday, May 25, 2026

வைகோ கடந்த காலத்தில் சொன்ன விடயங்களில் முக்கியமானது!

 வைகோ கடந்த காலத்தில் சொன்ன விடயங்களில் முக்கியமானது! 2ஜி ஊழல் கற்றைப் பணம் மொத்தமாக ஸ்டாலின் கைக்குத்தான் சென்றது என்று சொன்னார். “இதை நான் ஆதாரப்பூர்வமாகச் சொல்கிறேன் வேண்டுமானால் ஸ்டாலின் என் மீது வழக்குப்போடட்டும்” என்றும் வைகோ ஆணித்தரமாகவும் மேடைகளில் முன் வைத்தார்.

அடுத்து “ஸ்டாலினுக்கு ஈழப் பிரச்சனை என்றே வாயில் வராது! அதைச் சொல்லவும் தெரியாது! ஏதோ சிலோன் பிரச்சனை என்று தான் சொல்லுவார்! திமுகவில் ஒரு வட்டச் செயலாளருக்குத் தெரிந்த விஷயங்களோ சமூக அறிவுகளோ கூட ஸ்டாலினுக்குத் தெரியாது. என் கால் தூசிக்கு கூட சமமானவர் அல்ல ஸ்டாலின்” என்றும் வைகோ சொன்னார். அதை எல்லாம் மறந்துவிட்டு இன்று எப்படி எல்லாம் அறிக்கை விடுகிறார்!? மதுரையில் தினகரன் தீக்குளித்து இறந்த போது அழகிரி குறித்து என்ன பேசினார் வைகோ!? “அழகிரி ஒரு ரவுடி “என்று சொன்னார். கலைஞரைப் பற்றியெல்லாம் அவர் கடந்த காலத்தில் பேசிய பேச்சுக்கள் கொஞ்சநஞ்சம் அல்ல! கேட்டால் அன்றைக்குப் பேசிய பேச்சு வேறு! இன்றைக்குப் பேசிய பேச்சு வேறு! என்று சால்ஜாப்பு சொல்வார்! வைகோ அவர்களே! அன்றைக்கு பிரபாகரனை ஆதரித்தீர்கள் இன்றைக்கு ஆதரிக்கவில்லையா!? சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சம்பவங்கள் வேண்டுமானால் மாறலாம். வரலாற்றுச் சூழல்கள் நிகழ்ந்த நடைமுறைகள் குறித்து வேண்டுமானால் அவ்வப்போதைய நியாயங்களை பேசலாம்.! ஆனால் கடுமையாக நிலை நிறுத்தி சமூகத்தின் முன்பு நீங்கள் உரத்துப் பேசிய பேச்சுக்கள் எப்படி மாறும்! அப்படியானால் அன்றைய வைகோ வேறு இன்றைய வைகோ வேறு என்றாகிவிடுமா! இப்படிப் பொறுப்பில்லாமல் அகம்பாவமாக வைகோ பேசிப்பேசித்தான் அவரை நம்பி வந்த ஆயிரக்கணக்கான பல்லாயிரக்கணக்கான பேர்களை நட்டாற்றில் விட்டார். பல பேருக்கு நம்பிக்கை துரோகம் செய்து ஐந்தாறு பேர்களைத் தீக்குளிக்க வைத்துக் கெடுத்து நாசமாக்கி விட்டு போயிருக்கிறார்.! அந்த பாவம் எல்லாம் இந்த வைகோவைச் சும்மா விடுமா!? மேடையில் வீரவேசமாகப் பேசி என்ன பிரயோஜனம்! திறமை இருந்தும் கூட என்ன பலன்! வாய்மை நேர்மை சொல்லிய சொல் பிறழாமை வேண்டும். அவை எல்லாம் தேடி அலுத்து போனவர்கள் தான் உங்களை விட்டு ஒவ்வொருவராக வெளியேறிச் சென்று விட்டார்கள். ஒட்டுமொத்தமாக வெளியேறி இருந்தால் கூட ஏதோ ஆதாயத்திற்குப் போய்விட்டார்கள் என்று சொல்லலாம்! ஆனால் பல நாட்கள் ஆண்டுகள் கூட இருந்து ஒவ்வொருவராக மனவிரக்தியில் வெளியேறினார்கள். இப்படி மானசீகமாக உங்களை ஆதரித்தவர்கள் எல்லாம் உங்களை விட்டு வெளியேறியதற்கு காரணம் யார்!? நீங்களே கண்ணாடியில் உங்களை ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்!! இவ்வளவையும் செய்துவிட்டு கலைஞர் தன் இறுதிக்காலத்தில் ஸ்டாலின் கையைப் பிடித்து என் கையில் கொடுத்து நான் இறந்த பிறகு ஸடாலினை நீங்கள் தான் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதாக ஒரு பெரும் வரலாற்றுப் பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். வைகோ கலங்கரை சந்தித்த அன்று திருப்பூர் துரைசாமி அவருடன் கூட இருந்திருக்கிறார்! அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்றும் வைகோ பொய் சொல்கிறார் என்றும் அவர் என்னிடம் சொன்னார்! கலைஞர் ஷோபாவில் அமர்ந்திருக்க கீழே மண்டி போட்டு அமர்ந்து கொண்டு கலைஞரிடம் பேசிக் கொண்டிருந்தாரே ஒழிய வேறு ஒன்றும் அங்கு அவர் சொல்வது போல எல்லாம் நடக்கவில்லை! என்றார் துரைசாமி அவர் இன்னும் இருக்கிறார்! இப்படிப் பொய் பொய்யாகவும் பேச அவருக்குக்காலமும் நேரமும் தெரிந்திருக்கிறது பாருங்கள். அதன் அர்த்தம் ஸ்டாலினுக்கு ஆட்சி செய்யத் தெரியாது நீங்கள் தான் கூட இருந்து துணை செய்ய வேண்டும் என்பதாகக் கலைஞர் தன்னிடம் கேட்டுக் கொண்டார் எனக்கூறும் இந்த செண்டிமெண்டல் பொய் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை அன்றி வேற என்னத்தைச் சொல்வது! வைகோ - கலைஞரை Kaveri Hospital க்கு பார்க்க சென்ற போது அவர் மீது திமுக கட்சி காரர்கள் செருப்பு வீசப்பட்டது. அதை பற்றி பிறகு சொல்கிறேன். #திமுக #dmk #ஸ்டாலின் #stalin #StalinFails #vaiko #mdmk #vaiko #வைகோ #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost



No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...