Monday, May 25, 2026

#சாத்தூர்சட்டமன்றச்தொகுதியில் என் அன்புக்குரிய தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்கள்!

 #சாத்தூர்சட்டமன்றச்தொகுதியில் என் அன்புக்குரிய தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்கள்! தேர்தல் பணிக்காக இன்றைக்கு வெங்கடாசலபுரம் போன போது எனக்கு அங்கு பழைய நினைவுகள் வந்தன.

நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு கிழக்கே பள்ளிப்பட்டில் இருந்து கன்னியாகுமரி வரை இம்மாதிரியான ஓட்டுக் கட்டிடங்களில் தான் பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டன! இம்மாதிரியான ஓட்டு சாய்ப்பு கட்டடங்களைக் கட்டுவதற்கு ஜே சி குமரப்பாவின் நண்பர் )திரு வெங்கடாஜலபதி அவர்கள் (எனக்கு ஒரு வகையில் உறவினரும் கூட இதற்கெனச் சிறப்பு அதிகாரியாக நியமனம் பெற்று இந்தக் கட்டடங்களை அன்றைய சென்னை ராஜதானி முழுக்க வடிவமைத்தார்! அன்றைக்கு தமிழ்நாடு முழுக்க இந்த மாதிரியான கட்டடங்கள் தான் பள்ளிக்கூடங்களாக இருந்தன. அது வேறு விஷயம்! 1971 பொதுத் தேர்தலில் காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் இருந்த போது இந்த வெங்கடாசலபுரம் பள்ளிக்கு வந்து இதே இடத்தில் தான் அவர் வாக்கு சேகரிக்க வந்திருந்தார். அப்போது நானும் இருந்தேன்.நான் இளநிலைக்கல்லூரிப் பருவத்தில் இருந்தேன். காமராஜர் வாக்கு கேட்டுவிட்டு அடுத்து கோவில்பட்டி செல்ல வேண்டும்! நானும் அவர் பின்னால் சென்றேன்! அந்த பிராயத்திலேயே நான் அரசியல் பேசிக் கொண்டு 1971 இல் கல்லூரியில் அறிமுகமான காலம்! அவையாவும் பசுமரத்தாணி போல மனதில் இன்றும் இருக்கின்றன. இப்போது இது மாதிரியான கட்டிடங்களை இடித்து விட்டுப் கான்கிரீட் பள்ளி கட்டிடங்களை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் அக்காலத்தில் ஏழை பணக்கார வித்தியாசம் இல்லாமல் எல்லாக் குழந்தைகளும் எளிமையாகப் படிப்பதற்காக இந்த ஓட்டுக் கட்டடங்கள் முற்றம் வைத்து பெரிய ஜனனல்களுடன் கட்டப்பட்டன.. நல்ல காற்று கிடைக்கும் இடத்தில் கட்ட வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் ஆலோசனையின் பேரில் இது மாதிரிப் பள்ளிகள் தேசம் எங்கும் வடிவமைக்கப்பட்டது. முக்கியமானது!! போகன் வில்லாச் செடிகளும் சிறிய பிரார்த்தனை மைதானமும் நடுவில் இருக்கும். மையத்தில் தேசியக்கொடிக்கான கம்பமும் இருக்கும் . இன்றைக்கு அந்தப் பழைய கட்டடங்கள் வழக்கொழிந்து புதிய நவீன கட்டிடங்கள் பெருகிவிட்டதாலும் இம்மாதிரியான பழைய பள்ளிகள் அதன் கீர்த்தியையும் பெருமையையும் இழந்து காலாவதியாகி விட்டன. ஆனாலும் அந்தச் சிறு வயது மணல் விளையாட்டுக்கள் பள்ளியின் தண்டவாள மணி ஒலி எல்லாவற்றையும் கொண்ட அந்த அருமைப் பள்ளிக்கூடங்களின் நினைவுகள் இந்நாளில் எனக்கு வந்து போனது. மாபெரும் தேசிய உணர்ச்சிகளும் சுதந்திரத் தலைமுறையினரின் எதிர்காலக் கல்வி புத்துணர்ச்சி போன்றவற்றின் புதிய தொட்டில்களாக இந்தப் பள்ளிகள் அக்காலத்தில் விளங்கின என்பதை நினைத்துப் பார்த்துக் கொண்டேன். இன்று இந்த வெங்கடாசலபுரம் வந்த போது அருந்தலைவர் காமராஜரின் நினைவுகளும் இந்த பள்ளிகளைச் சிறப்புற வடிவமைத்த வெங்கடாஜலபதி போன்றவர்களின் நினைவுகளும் மனதில் நிழலாடின. #அன்றையபள்ளிகள் #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost





No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...