Monday, May 25, 2026

*இது ஆதங்கம் அல்ல*…..

 *இது ஆதங்கம் அல்ல*…..

*அரசியல் அவலம்* ⁉️ ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் கருத்து பல சமயங்களில் உரிய கவனம் அளிக்கப்படாமல் போகும்;! ஏற்கெனவே நிலைப்பெற்ற அமைப்பு அல்லது கருத்தின் மீது உங்கள் கருத்து தாக்கத்தை உண்டாக்கும்பட்சத்தில் நீங்கள் பெருந்தாக்குதலுக்கு உள்ளாவதோடு, உங்கள் கருத்தும் புறம் தள்ளப்படும்.. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த அல்லது நம்மை அவரவர் அறிவுக்கே ஏற்ப புரிந்துகொண்டவர்களுக்கு நாம் சிலவற்றைச் சொல்ல விரும்புகின்றோம், நெல்லைச் சீமையின் சின்ன ஒரு கிராமம், குருஞ்சாக்குளத்தில் பிறந்த இந்த கரிசல் மண்ணின் மைந்தன். நான் தைரியமாக சொல்வேன் தெலுங்கு பேசும் தமிழன் நான் என்று. தகுதியே தடை என்ற நிலையில் எனக்கு கிடைத்த நல்வாய்ப்புகளை தடுத்தவர்கள் பலர் உண்டு. கடந்த பல நாட்களாக சாத்தூர் பகுதியின் தேர்தல் களத்தில் இருக்கிறேன்! இங்கே சிலர் திட்டமிட்டே பாஜகவும் அதிமுகவும் தெலுங்கு பேசுகிற மக்களுக்கு எதிரிகள், விரோதமானவர்கள் என்று அப்பட்டமாக அவதூறாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் அவதூறு பேசுகிறவர்கள் எல்லாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் ! இன்று அவதூறுகளை அள்ளித் தெளிக்கிற இதே திமுக தானே ?. என்னையும், வைகோ போன்றவர்களையும் திமுக கட்சியை விட்டு , தங்களின் குடும்ப நலனுக்காக விலக்கி வைத்து. வேடிக்கை பண்ணியது ஸ்ரீவில்லிபுத்தூர் அமுதன் அவர்கள் தன் இறுதி காலத்தில் மன நிம்மதியற்று இறந்து போனார். அந்த இறப்பிற்கான காரணம் என்ன ? இந்த தென்பாண்டி நாட்டில் அவர் திமுகவால் புறந்தள்ளப்பட்டதால் தானே ? ஒரு காலத்தில் தென் தமிழ் நாட்டிற்கு வரும் போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் அமுதன் அவர்களின் வீட்டில் தான் கலைஞர் சென்று அந்த காலத்தில் தங்குவார். ஆனால் அந்த நன்றி உணர்ச்சி கூட இல்லாமல் அவரைப் புறந்தள்ள வைத்தது எது ? பெருந்தலைவர் காமராஜர் அவர்களையேத் தோற்கடித்த அண்ணன் விருதுநகர் பெ. சீனிவாசனின் நிலைமை கடைசியில் என்னவாயிற்று? இப்படி மனம் கிலேசப்பட்டு, சஞ்சலத்துடன், மன வருத்தத்துடன் மறைந்தவர்கள் எல்லாம் , திமுக கட்சியை விரும்பிப் போனவர்கள்தான் ! அப்படி விரும்பிப் போனவர்களையெல்லாம் திமுக வேண்டுமென்றுதானே புறக்கணித்தது ? இதன் பின்னுள்ள காரணி என்ன ? அன்று உங்களுடன் தோளுக்குத் தோளாக நின்று போராடிய என்னைப் போன்றவர்களையெல்லாம் புறந்தள்ளி ஒதுக்கியது யார்.. இன்றைய ஆளும் திமுக,தானே ? இன்று ஆடு நனைகிறதே, என்று ஓநாய் அழுத கதையாக, என்டி எ கூட்டணி ஒரு தொகுதியைக் கூட தெலுங்கர்களுக்கு கொடுக்கவில்லை என்று திமுகவினர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் ! ஆனால் உங்களின் பொய்யுரை பலிக்காது,,, உங்களின் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் பொய் உண்மையாகி விடும்,,என்கிற கோயபல்ஸ் தந்திரம், இங்கே செல்லுபடியாகாது,,,, ஆனாலும்,,, உங்களிடமே கேட்கிறேன் ! நீங்க ஒரு தொகுதி ஒரேயொரு தொகுதி சாத்தூர் தொகுதியில் தெலுங்கு பேசும் மக்களுக்கு இப்போது கொடுத்து உள்ளீர்கள். ஆனால் பெரும்பாலான நாயக்கர் மக்கள் வாழும் கோவில்பட்டியில் அவர்களுக்கு ஏதும் சீட் கொடுத்து உள்ளீர்களா!? இல்லை ராஜபாளையத்திலாவது தெலுங்கர்களுக்குக் கொடுத்துள்ளீர்களா!? நீங்களும் ஒரு சீட் தான் கொடுத்திருக்கிறீர்கள் நாங்களும் ஒரு சீட்டை வடக்கு வட்டாரத்தில் கொடுத்திருக்கிறோமே,,, ! காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எஸ்.ஆர். நாயுடுவுக்கும், இராவன்ண கிருஷ்ணசாமி நாயுடுவுக்கும், திருமங்கலம் ராஜாராம் நாயுடுவுக்கும், காங்கிரஸ் அமைச்சரவையில் 1950 களில் 60 களில் ஏன் இடம் அளிக்கவில்லை. திமுகவின் நிறுவனத் தலைவர்களாக இருந்த வேலூர் சின்னராஜ் என்ற சிற்றரசுக்கும், அண்ணன் பெ.சீனிவாசனுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் செய்தவர்கள் யார் ? ஏன் அவர்களைப் புறக்கணித்தார்கள்? ஆனால் அதிமுக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சி காலத்தில் தான் தெலுங்கு பேசும் திருச்சி சௌந்தரராஜன் அவர்களையும், பின் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கடம்பூர் ராஜூ அவர்களையும், அமைச்சராக்கி அழகு பார்த்தது அதிமுக ஆட்சி தான்,,,, பல ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு பேசுபவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது அதிமுக ஆட்சியில் தான், அந்த அதிமுக கூட்டணி? தெலுங்கர்களை புறக்கணிக்கிறது என்று இன்று வந்து பொய்யுரைக்கிறீர்களே ?? இது நியாயம் தானா ? இவையெல்லாம் ஏனென்று தெலுங்கு பேசும் மக்கள் உணர வேண்டும். இன்று புறம் பேசுகிறவர்களே ! கடம்பூர் ராஜு யார் என்று உங்களிடம் கேட்கிறேன்.! நமக்காக உழைத்தவர் உழைப்பவர் அல்லவா ! ஆனால் புறம் பேசுகிற திமுக வினர் நாயக்கர்களிடம் ஓட்டு மட்டும் வாங்கிவிட்டு தெலுங்கர்களை படு விவரமாகப் புறக்கணிக்கிறீர்கள்! பிறகு

No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...