Monday, May 25, 2026
#தமிழ்புத்தாண்டுவாழ்துக்கள்
Tamil New Year Wishes In Tamil:
தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டின் முதல் மாதம் தான் சித்திரை. இந்த சித்திரை 1 ஆம் தேதி தமிழர்களால் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் காலம் என்பதால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பராபவ வருடம் பிறக்கிறது. வாழ்த்துக்கள்
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
மொழியை, மனிதரை, நாட்டை வாழ்த்தும் பாரதியின் இந்தப்பாடலையே என் புத்தாண்டு வாழ்த்துக்களாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்தப் பாடல் ஒரு புத்தாண்டு வாழ்த்தாகத்தான் பிறந்தது என்பதை இன்று பலர் அறிய மாட்டார்கள்.1907ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி இந்தியா இதழின் முதல் பக்கத்தில் 'Happy New Year's Day புது வருஷப்பிறப்பு நாள்' எனத் தலைப்பிட்டு ஒரு கருத்துப் படத்தோடு அந்தப் பாடல் பிரசுரமாயிற்று..
அதன் கீழ் பாரதி ஒரு குறிப்பும் எழுதியிருந்தார் அது:
சென்ற வாரம் சனிக்கிழமையன்று தமிழர்களின் புது வருஷப்பிறப்பு நாள். ஆதாலால் அன்று நாம் விடுமுறை பெற்றுக் கொண்டோம். (கவனிக்க விடுமுறை பெற்றுக் கொண்டோம், கொடுத்தோம் அல்ல, அறிவித்தோம் அல்ல யாரிடமிருந்து பெற்றுக் கொண்டார்? வாசகர்களிடமிருந்து. ஏனெனில் அவர்களே பத்திரிகையாளரின் எஜமானர்கள்) புது வருஷம் நமக்கு ஸ்ர்வமங்களமாகவே பிறந்திருக்கின்றது. என்று தொடரும் அந்தக் குறிப்பில் பாரதி எழுதுகிறார் ." .மேலும் நமக்கு அநேக நற்சகுனங்களும் தோன்றியிருக்கின்றன
தூத்துக்குடிக்கு சுதேசியக் கப்பல்கள் வந்துவிட்டன.பஞ்சாபில் பத்திரிகைக்காரரின் தண்டனை உறுதியாகிவிட்டது.அதாவது தேசாபிமானம் என்று வாயால் பேசிக் கொண்டிருந்த நாட்கள் போய், கஷ்டத்தைப் பாராமல் தேசத்திற்குழைக்கும் நாட்கள் வந்துவிட்டன. தூக்கத்திலே விருப்பம் கொன்ட சென்னை மாகாணத்திலே தேசாபிமான ஜலத்தை வாரிக் கொட்டி எழுப்பிவிடும் பொருட்டாக, பாபு விபின் சந்திரபாலர் வந்து விட்டார். இன்னும் பல நற்குறிகளும் காணப்படுகின்றன. இவையனைத்தையும் பாழாக்கிவிடாமல் காலத்தின் சின்னங்களை நமக்கனுகூலமான வழியிலே பயன்படுத்திக் கொள்வது நம்மவர்களின் கடமையாகும்".
Subscribe to:
Post Comments (Atom)
*இது ஆதங்கம் அல்ல*…..
*இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment