அவற்றில் 27,527 வாக்குச்சாவடிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.
மேற்கத்திய நாடுகளில் கட்சி ப் பெயர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இந்தியாவில் அதற்குப் பதிலாகச் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆள் மாறாட்டத்தைத் தடுப்பதற்காக இந்திய விஞ்ஞானிகள் விரல்களில் வைப்பதற்கு அழியாத மையையும் உருவாக்கினர்! முதல் இந்தியத் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதைக் காண நேபாளம் இந்தோனேசியா உட்பட பல நாடுகள் தங்களின் அதிகாரப்பூர்வக் குழுக்களை இந்தியாவிற்கு அனுப்பினார்கள்.! 1953 தேர்தலை சந்தித்த சூடான் தனது பொதுத்தேர்தல்களை நடத்த சுகுமார் சென் அவர்களின் உதவியை நாடியது. கடுமையான முயற்சிகளுக்கிடையே அவற்றைத் திறம்பட ஒருங்கிணைத்த சுகுமார் சென் அவர்களின் நினைவாக அதன் தலைநகரில் ஒரு சாலைக்கு “சென்சாலை” என்று பெயர் சூட்டிக் கொண்டது. பண்படுத்தப்படாத படிப்பறிவில்லாத இந்திய மக்களிடையே ஒரு தேர்தல் முறையை செப்பனிட்டு முறைப்படுத்தி அதற்கு ஆயிரக்கணக்கான வழிமுறைகளைக் கண்டறிந்து பல்வேறு மாநிலங்களையும் இணைத்து கச்சாவாக இருந்த மக்கள் தொகுதியை ஜனநாயக பண்பாட்டு தொகுதியாக மாற்றி அமைப்பதில் இத்தகைய அறிவார்ந்த மனிதர்கள் தனது முன் முயற்சிகளைத் தந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.அவர்களது நினைவை நாம் போற்றத் தான் வேண்டும். ஓட்டுக்குப்பணம் திமுக , அதிமுக இரண்டு கட்சிகளும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கின்றன. என்ன காமடி எனில், அதிமுகவுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள் என்றறிந்த மக்களுக்கு அதிமுகவும், திமுகவுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்றிருக்கும் மக்களுக்கு திமுகவும் கொடுக்கின்றன. அதனால் என்ன லாஜிக் எனில், பணம் கொடுப்பதன் மூலம் கட்சி மாற்றி ஓட்டுப் போட வைக்க முடியாது. அதே நேரத்தில் அவர்கள் வாக்களிக்க இருக்கும் கட்சிக்கு ஓட்டுப்போடவே பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டைப் பற்றி பெருமையாகப் பேச எவ்வளவோ இருக்கிறது. பேசிக்கொண்டும் இருக்கிறோம். இந்த ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் மற்றும் பணம் வாங்கும் அசிங்கத்தை மட்டும் களைய முடியவில்லை. 2/2 #ElectionUpdate #tamilnadupoltics #தமிழகஅரசியல் #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
*இது ஆதங்கம் அல்ல*…..
*இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment