Monday, May 25, 2026

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என்ற அந்த வாய்ப்பை எனக்குத் தரக்கூடாதென மறுப்பதற்கு வைகோவுக்கு எப்படி மனம் வந்தது! துரோகி யார்?.

 வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என்ற அந்த வாய்ப்பை எனக்குத் தரக்கூடாதென மறுப்பதற்கு வைகோவுக்கு எப்படி மனம் வந்தது! துரோகி யார்?. கைம்மாறு கருதாது எத்தனை உதவிகள் வைகோவுக்குச் செய்திருக்கிறேன்! வைகோவுக்குப் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அறிமுகப்படுத்தி வைத்தவனே நான் தானே . என்னால்தானே ?திரு.வே.பிரபாகரனை வைகோவுக்கே தெரியும்!

அன்றைக்கு அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை எம் பி யாக நெடுமாறன் போன்றவர்களை அழைத்து வாக்களிக்க வைத்து வெற்றி பெற நான் எடுத்த பொறுப்புகள் அதிகம். ஆனால் இவர்கள் தான் என்னையும், என்னைப் போன்றோரை எல்லாம் ஒதுக்கி விட்டு அரசியலில் ஒட்டு புற்களாகிப் போனார்கள். அதுதான் கடைசி காலத்தில் இப்படியெல்லாம் திமுகவினரிடம் அவமானப் படுகிறார்கள்! நமக்கு நன்மை செய்வதற்கென இன்றைக்கு ஒருவர் வந்திருக்கிறார் என்றால் அதை ஒட்டி நமது எதிர்காலத்தைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நான் முக்கியமாக முன் வைக்க விரும்புகிறேன். இந்தத் திமுக எனும் மோசடியான தனி குடும்பச் செல்வாக்கில் இன்றோ ? நாளையோ ? அல்லது என்றோ ? ஒரு நாள் என்று காத்திருந்தால் எதிர்காலத்திலும் நமக்கு ஒன்றும் கிடைக்காது! இலவு காத்த கிளியாகத்தான் நாம் காத்திருந்து ஏமாற வேண்டும். அந்த ஏமாற்றத்தினைத் தவிர்க்க நாம் நம்மை பெரும் ஆதரவுடன் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் ! இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும் ! இப்போது இதனை உணரத் தவறி விட்டால் நமக்கு என்றும் விமோசனம் இல்லை! மேலே குறிப்பிட்ட சில நிகழ்வுகளை, நாயக்கர் இன மக்களுக்கான புறக்கணிப்புகளை எல்லாம் , கடந்த கால வரலாற்ரு அரசியலாக மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நம் இடத்தினை தக்க வைக்க வேண்டியாவது, அவதூறுகளை நம்பாமல், நமக்கான இலக்கினை நோக்கி சரியாக பயணிக்க வேண்டும்,,, உங்களொடு இணைந்து பணியாற்றுகிற என் கருத்துக்களையும், சற்றே கவனியுங்கள் என்றே வேண்டுகின்றேன். இது ஆதங்கம் அல்ல….. அரசியல் அவலம் ⁉️ எனது தனிப்பட்ட கருத்துகள்… கே. எஸ். இராதாகிருஷ்ணன் இன்று,சட்டமன்றத் தேர்தல்-2026 #கரிசல்காடு #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 23-4-2026




No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...