Monday, May 25, 2026

70 வருடமாக பிஜேபி வந்தால் இந்தி வந்துவிடும் தமிழ் மொழி அழிந்துவிடும் தமிழர் பண்பாடு மோசமாகிவிடும் என்றெல்லாம் கிளிப்பிள்ளை சொன்ன மாதிரி சொல்லிக் கொண்டே வருகிறார்கள்!

 70 வருடமாக பிஜேபி வந்தால் இந்தி வந்துவிடும் தமிழ் மொழி அழிந்துவிடும் தமிழர் பண்பாடு மோசமாகிவிடும் என்றெல்லாம் கிளிப்பிள்ளை சொன்ன மாதிரி சொல்லிக் கொண்டே வருகிறார்கள்! திமுற மத்திய அமைச்சரவையில் 18 ஆண்டு காலம் பங்கு பெற்றார்களே அப்பொழுதெல்லாம் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு இப்பொழுது வந்து இந்தக் கூச்சலை தொடர்ந்து போட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தம் என்ன!?

நீண்டகாலமாக 18 வருடம் மத்தியில் கூட்டணியில் இருந்தார்கள் என்பதாவது ஸ்டாலினுக்கு தெரியுமா? அப்போது இந்தி வந்துவிடும் தமிழ் அழியும் என இவர்கள் மக்களை ஏமாற்றி வருவதும்தும்…. சும்மா யாராவது எழுதிக் கொடுப்பதை வைத்துப் பேசிக்கொண்டு இந்தி வந்துவிடும் அது வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டே காலத்தை கடத்தி விட்டது திமுக. மக்களை மடையர்கள் என்று நினைப்பதில் திமுகவை விட்டால் இங்குவேறு யாரும் எந்த கட்சியும் இல்லை. இந்தி வந்துவிடும் தேசியக் கட்சிகள் வந்து விடும்!நாம் வேறு தனியாக விலகிப் போக வேண்டும்!பிரிந்து போக வேண்டும்! என்று பேசிப் பேசி இவர்களின் வாய் புழுத்துப் போய்விட்டது.இவர்கள் ஆட்சியில் நடக்கும் அலங்கோலங்கள் மதுக்கடை மரணங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பாலியல் வல்லுறவுகள் ஊழல்கள் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுப் போய் இருத்தல் காவல்துறை நசிவு இன்னும் பல விஷயங்கள் இவர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் தெரியவில்லையா? அதை விசாரிக்கக் கூடப் பொது அமைப்புகள் இல்லை! வேறு என்ன செய்வது!? நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்!? #dmkfails #DMKfamilyPvtLtd #tamilnadupoltics #தமிழகஅரசியல்

No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...