#தேர்தல் சில செய்திகள்
————————————- இன்றைக்கு நடக்கும் தேர்தல் கூத்துகளைப் பார்க்கும் பொழுது நமது நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடந்த முதல் தேர்தல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்துத் திருப்பி பார்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது! இந்தியக் குடியரசின் முதல் தேர்தலில் 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கும் முறை அமலுக்கு வந்தது! 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 25ல் தொடங்கி 1952 பிப்ரவரி 21 வரை 68 கட்டங்களாக நீண்ட காலம் அந்த முதல்த் தேர்தல் தொடர்ந்து நடைபெற்றது. முதலாவது மக்களவையில் மொத்தமுள்ள 489 தொகுதிகளில் நின்று 364 இடங்களில் வென்று ஜவஹர்லால் நேரு முதல் பிரதமர் ஆனார்! முதல் தேர்தலின் சிறப்புகள் குறித்தும் அதை நிகழ்த்திய முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் குறித்தும் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியிடும் வகையில் ஹம் ஹிந்துஸ்தானி திரைப்படம் இப்போது தயாராகி வருகிறது! சுகுமார் சென்னாக நடிகர் கைஃப் அலி கான் நடிக்கிறார். ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது 1920 தொடங்கி 23 26 30 34 1945 ஆண்டுகளின் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 1947 ஆகஸ்ட் 15 ல் சுதந்திரம் அடைந்தவுடன் 1950 ஜனவரி 25ல் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது.!மார்ச் 21 இல் சுகுமார் சென் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதும் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளாகும்! ஆனால் அவர் தனது தேர்தல் அனுபவங்கள் குறித்து எதையும் எழுதவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது. கல்கத்தாவில் 1899 இல் பிறந்தவர் சுகுமார் சென்! அங்குள்ள பிரசிடென்சி கல்லூரியிலும் பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்திலும் கணிதம் பயின்ற 1921 இல் இந்திய குடிமைப் பணியில் சேர்ந்தார். மேற்கு வங்காள அரசு தலைமைச் செயலராகப் பணியாற்றிய அவர் இந்தியத்தலைமைத் தேர்தல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். எந்த ஒரு இந்திய அதிகாரிக்கும் இத்தகைய பிரமாண்டமான பணி இதற்கு முன் வழங்கப்பட்டது இல்லை! சுதந்திரம் அடைந்தவுடன் தற்காலிகப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அரசு தன் நேரடி பார்வையில் சுகுமாரனைத் தேர்ந்தெடுத்தது! இவருக்கு உதவியாக ஆணையச் செயலாளர் பி எஸ் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பணியாற்றினர். இந்த முதல்த் தேர்தலின் சாதனைகளைப் பட்டியலிட்டால் ஆங்கில ஆட்சியில் எப்படித் தேர்தல் நடத்தப்பட்டதோ அதைப் பின்பற்றியே சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடத்தப்பட்டன! முதல் மக்களவையில் 489 இடங்களுக்கு 1874 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்!.17.30 கோடி பேர் வாக்களித்தனர்! தேர்தல் பணிக்காக இரண்டு மண்டலத் தேர்தல் ஆணையாளர்கள்.ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் 21 வயது மேற்பட்ட வயதுடைய 17.6 கோடி இந்தியர்களில் சுமார் 85 சதவீதம் பேருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது! ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பெயரிட்டு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய வேண்டிய மாபெரும் சிரமம் இருந்தது வாக்காளர் பட்டியல் வட இந்தியப் பெண்களின் பெயர்கள் இடம் பெறவில்லை! மாறாக இன்னார் மகள் இன்னார் மனைவி என்ற நிலையில் சுமார் 28 லட்சம் பெண்கள் இருந்தனர்! அப்போது இந்திய தேர்தல் ஆணையர் சுகுமார் சென் அந்தப் பட்டியலை நீக்கிவிட்டு பெண்களின் உண்மையான பெயர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியல் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்!! வாக்காளர் பட்டியலைத் தட்டச்சு செய்யவும் தொகுப்பதற்காகவும் சுமார் 16,500 எழுத்தர்கள் ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்! வாக்காளர் பட்டியலை அச்சிடுவதற்கு 3.80 லட்சம் ரீம் தாள்கள் பயன்படுத்தப்பட்டன. எழுத்தறிவு இல்லாதவர்கள் அறியும் வகையில் கட்சிகளின் சின்னங்கள் வாக்கு சீட்டுகள் வாக்குப் பெட்டிகளை வடிவமைத்தல் வாக்குச்சாவடிகளுக்கான இடங்களை அடையாளம் கண்டு அங்கே நேர்மையான திறமையான வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்! ஒவ்வொரு வேட்பாளர் பெயரிலும் தனித் தனி வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன! இரும்பு அலமாரிகள் தயாரிக்கும் கோத்ரேஜ் நிறுவனத்தினர் சுமார் 2.10 கோடி எஃகு வாக்குப் பெட்டிகளைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றனர்! இவற்றைத் தயாரிப்பதற்காகவே கோத்ரேஜ் நிறுவனத்தினர் மும்பையின் புறநகர் பகுதியான விக்ரோலியில் 2.33 லட்சம் சதுரஅடி கூரையிடப்பட்ட பரப்பளவை கொண்ட ஒரு கிராமத்தை குத்தகைக்கு எடுத்தனர்! அந்தத் தொழிற்சாலை ஒரு நாளைக்கு 15000 மேற்பட்ட வாக்குப்பெட்டிகளை உற்பத்தி செய்தது! 20 லட்சம் எஃகு வாக்குப் பெட்டிகள் அன்றைக்கு தயார் செய்யப்பட்டு இருந்தன! அவற்றைத் தயாரிக்க மொத்தச் செலவு ஒரு கோடியே 22 லட்சத்தி 87 ஆயிரத்து 349 ரூபாய்கள்.. நாட்டில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 84 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.1/2
Subscribe to:
Post Comments (Atom)
*இது ஆதங்கம் அல்ல*…..
*இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment