உண்மையில் M. K. Stalin திமுக ஆட்சியில் அமைத்த இந்த குழுக்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பலன் கிடைத்தது ?
ரகுராம் ராஜன், எஸ்தர் டுபிலோ, அரவிந்த் சுப்ரமணியன், ஜான் டிரஸ், ஸ். நாராயண் போன்ற உலகளாவிய நிபுணர்களை கொண்ட 'பொருளாதார ஆலசோனை குழு' அமைக்கப்பட்ட போது மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . ஆனால் மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயை நெருங்கி உள்ள நிலையில் இக்குழுவின் ஆலோசனைகளால் தமிழகத்தின் பொருளாதாரத்தில் என்ன பெரிய மாயாஜாலம் நிகந்து விட்டது என்ற கேள்விக்கு அரசிடம் தெளிவான பதில் இல்லை . புதிய மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது ஆனால் அக்குழுவில் இருந்து பேராசிரியர் ஜவஹர் நேசன் அதிருப்தியோடு விலகியது மாபெரும் சர்ச்சையானது. அக்குழு அளித்த பரிந்துரைகளும் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை அதேபோல் தொழில் துறை தேவைக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது. பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டிய கல்வித் துறையின் நேரடி அதிகாரத்தை இத்தகைய குழுக்களை தாமதப்படுத்துகின்றனவா என்ற விமர்சனமும் எழுந்தது. சுப வீரபாண்டியன் தலைமையில் சமூக நீதி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது அரசு துறைகளில் சமூக நீதி முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வது இதன் பணி. ஆனால் இதற்கென சமூக நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை செயல்படும்போது தனியாக ஒரு குழு ஏன் என்ற கேள்வி உள்ளது. அதேபோல் ஆன்லைன் ரம்மி தடைக்கும் பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை களையவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்களின் சில பரிந்துரைகள் கயிறு கட்ட தடை போன்றவை வரவேற்பை விட அரசியல் சர்ச்சைகளையே கிளப்பின. கொரோனா பேரிடர் காலத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ண லிங்கம் தலைமையிலான குழு சிறப்பாக செயல்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் நலிவடைந்த சிறு குறு தொழில்களை மீட்டெடுக்க சுந்தரதேவன் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் நிலை என்ன குழு பரிந்துரைத்த மின் கட்டண சலுகை குறைந்த வட்டி கடன் போன்றவை முழுமையாக நிறைவேற்றப்படாததால் இன்று வரை சிறு தொழில்கள் வீழ்ச்சியில் தான் உள்ளன. நிதி துறையும் தொழில் துறையும் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயங்களுக்கு எதற்கு குழு? உருப்படியாக ஏதேனும் செய்ததாக சொல்ல வேண்டுமானால் அதிகபட்சம் பசுமை குழுவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் நடுதல் தொடர்பான விஷயங்களை சொல்லலாம். அதில் பிரபலமானது பிளாஸ்டிக் தவிர்க்கும் மஞ்சள் பை இயக்கம். கிட்டத்தட்ட 40 குழுக்களில் பணியில் இருந்து சொல்லக் கூடியது என்றால் மஞ்சள் பயித்திட்டம் தான் இருக்கிறது பின் எதற்காக 40 குழுக்கள். அமைதிப்படுத்தும் உத்தியா எந்த ஒரு குழுவாக இருந்தாலும் அதில் குறைந்தபட்சம் ஐந்து உறுப்பினர்களை பார்க்க முடிந்தது மாதம் ஒருமுறை ஆண்டுக்கு ஒரு முறை கூடி பேசுவர் ஏராளமான அரசு நிதி செலவிடப்பட்டது. ஒரு கட்டத்தில் அரசு தன் மீதான விமர்சனங்களை தணிக்கவும் அதிருப்தியாளர்களை அமைதி படுத்தவோமே இந்த குழுக்களை பயன்படுத்துகிறதோ என்று சந்தேகம் எழுந்தது. அரசை தீவிரமாக விமர்சித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் இந்த 40-க்கும் மேற்பட்ட குழுக்களில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டவுடன் மௌனமாகிவிட்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது. குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய நிலப்பரிமாற்றங்களை எளிமைப்படுத்த தொன்மையான கோவில்களை புதுப்பிக்க என எதற்கெடுத்தாலும் குழுக்கள் அமைக்கப்பட்டன இதற்காக பல கோடி ரூபாய் வரி பணம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் குழுக்களின் எத்தனை அறிக்கைகள் முழுமையாக பொதுவெளியில் வைக்கப்பட்டன எத்தனை பரிந்துரைகள் அரசாணைகளாக மாறின என்ற தகவலில் வெளிப்படைத்தன்மை இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுக்கள் செய்த சாதனைகளையும் வீணடித்த நிதியையும் கணக்கெடுக்க கட்டாயம் இன்னொரு குழு அமைக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
*இது ஆதங்கம் அல்ல*…..
*இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment