Monday, May 25, 2026

பழைய நினைவுகள்: 1952 மற்றும் 1957தேர்தல்களில்……

 பழைய நினைவுகள்: 1952 மற்றும் 1957தேர்தல்களில்……

——————————————————— இன்றைய காலங்களில் மீது வருத்தமில்லை!மாறாக பல நடைமுறைகளின் மீது அவலம் மட்டுமே மிஞ்சுகிறது. குறிப்பாகத் தேர்தல் காலங்களில் மக்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்கிற நிலை முற்றிலுமான ஜனநாயகத்தின் தோல்வியாக இருக்கிறது. எங்கள் காலத்தில் மக்கள் கூடி ஊர்வலம் சென்று கட்சிகளுக்கு வாக்குச் சேகரித்து தேர்தல் நாளில் சாவடிகளில் வேட்பாளர்களின் சின்னங்கள் குறித்த வாக்குத்தாள் கொடுக்கப்படும் அதில் தான் விரும்புகிற ஒரு கட்சியின் சின்னத்திற்கு ஒரு முத்திரை இட்டு பெட்டியில் சேர்ப்பது வழக்கம். அந்த வாக்குத்தாள்களைச் சின்னம் வாரியாகப் பிரித்து ஒவ்வொன்றாக எண்ணி அடுக்கிக் கட்டுகள் போட்டு விடிய விடிய தேர்தல் அதிகாரிகள் அதன் எண்ணிக்கையைச் சொல்ல சொல்லக் கேட்டுக் கொண்டிருப்போம். அப்போது வேட்பாளருக்கு பெரிய மரியாதைகள் இருக்கும். வேட்பாளர் வருகிறார் வந்துவிட்டார் என்று அந்த வெற்றி வாய்ப்பைக் கொண்டாட்ட மனநிலையில் மக்கள் ஏற்றுக் கொண்ட காலம் அது! இப்பொழுது என்னவென்றால் நான் சொல்வது 1998 வரை! இ வி எம் எந்திரங்கள் வந்த பிறகு அதன் ரிசல்ட் கள் முழுக்கக் கணணி ஊடகங்கள் கையில் எடுத்துக் கொண்டு தொலைக்காட்சி பெட்டிகளில் குழப்பம் தரும் வகையில் அவற்றின் எண்ணிக்கை சொல்லப்படுவதால் வெறும் எண்ணிக்கை சார்ந்து அதன் வெற்றி தோல்வி ஆர்வங்கள் அழிந்து போய்விட்டது. வேட்பாளர் மீதும் பெரிய மரியாதை இல்லை! பலருக்கு வேட்பாளர் யார் என்று தெரிவதுமில்லை! என்ன கொடுத்தீர்கள்?யாருக்கு கொடுத்தீர்கள்? என்றால் நீங்கள் சம்பாதித்ததைத் தானே கொடுக்கிறீர்கள் என்று வேட்பாளர்களை நோக்கி கேள்வி கேட்கும் நிலை வந்திருக்கிறது! இந்த நிலை வந்த பிறகு என்ன விதமான தேர்தல்?என்ன அதன் மாண்பு? என்ன அதன் மகிமை? என்ற கேள்விகள் தான் மிஞ்சுகிறது! ஒரு வகையில் இப்படியான தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே நமக்கு நல்லது எனவும் தோன்றுகிறது! இளமையில் அரசியல் ஆர்வம் என்பது மக்கள் நலப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதன் நோக்கத்தில் இருந்து வருவது! அரசியல் கல்லூரி பாடங்களில் இருந்தும் பிறகு அதுவே மக்கள் போராட்டங்கள் மக்களுக்கான உரிமைகள் பற்றி பேசுகிறபோது லட்சியமாகவும் மாறும் நிலையில் ஜனநாயகத்தை காப்பாற்றுகிற ஒரு பொது மனிதனாக நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலையில் தான் அரசியலில் ஈடுபடுகிறோம். 1952 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அப்போதைய மெட்ராஸ் மாநிலத்தில் நடைபெற்ற முதல் தேர்தலில், பி. சுப்பராயன், ராம்நாத் கோயங்கா மற்றும் டி. செங்கல்வராயன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தோல்வியைச் சந்தித்தனர். மக்களவைக்கு இரண்டு உறுப்பினர்களையும், மாநில சட்டமன்றத்திற்கு 10 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக, சென்னை (அப்போதைய மெட்ராஸ்) 1957 மார்ச் 8 அன்று தேர்தலைச் சந்தித்தது. 1952 தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை மதிப்பிடும்போது, ​​இந்த ஆய்விற்காக தமிழ்நாட்டின் தற்போதைய எல்லைகளுக்குள் இருந்த தொகுதிகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டன. மெட்ராஸ் மாநிலத்தில் மொத்தம் 62 தொகுதிகளில் 13 இரட்டை உறுப்பினர் தொகுதிகள் உட்பட 75 இடங்கள் இருந்தபோதிலும், அவை தற்போதைய மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், 31 தொகுதிகளில் பரவியிருந்த 38 இடங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு வாக்காளர்களையும் தேர்தல் நிபுணர்களையும் ஒரே மாதிரியாக ஆச்சரியப்படுத்தத் தவறியதில்லை. இந்த போக்கு மக்களவையின் முதல் பொதுத் தேர்தலில் தெளிவாகத் தெரிந்தது. 1952 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அப்போதைய மெட்ராஸ் மாநிலத்தில் (ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது) நடைபெற்ற முதல் தேர்தலில், பி. சுப்பராயன், ராம்நாத் கோயங்கா மற்றும் டி. செங்கல்வராயன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தோல்வியைச் சந்தித்தனர். ஆனால் இன்று இதையெல்லாம் நாம் சொன்னால் நம்மை பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்! அரசியல் என்றாலே பணத்தை இறைத்து மீண்டும் பணத்தை சம்பாதிக்க கூடிய வணிகம் ஆகிவிட்ட நிலையில் தேர்தல் என்பது கொடுக்கல் வாங்கல் என்பதாக ஆகிவிட்டது! இன்றைக்கு காந்தியே வந்து தேர்தலில் நின்றாலும் கூட அவர் தோற்று விடுவார்! ஆனால் அவருடைய படம் பொறித்த பணத்தாள்கள் வெற்றி பெற்றுவிடும்!. அதுதான் இன்றைய உண்மை! வேறு என்னத்தைச் சொல்ல? ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு முன்பு வாக்காளர்கள் வரிசையில் நிற்பதை இப்படம் காட்டுகிறது. | புகைப்பட உதவி: தி இந்து ஆவணக்காப்பகம் #Elections2026 #பொதுத்தேர்தல் #நேற்றையரசியல் #TamilNaduPolitics #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost



No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...