Tuesday, May 12, 2026

வலிவு என்பது உடம்பு அல்ல. புத்தி..

 வலிவு என்பது உடம்பு அல்ல. புத்தி.. புத்தியின் வலிவு என்பது தெளிவு. தெளிவு ஒருவருக்கு எப்போது வரும். தன்னை அறிதலில் வரும். தனக்கு வேண்டியது வேண்டாதது, தன்னால் முடிந்தது முடியாதது புரியும் போது வரும். தெளிவு பெற என்னதான் செய்தல் வேண்டும்.? தன்னை தன் நோக்கத்தை ஆழமாக விசாரித்து அறிய வேண்டும். வெட்கமின்றி, விருப்பு வெறுப்பின்றி தன் பலத்தை, பலவீனத்தை தானே ஏற்றுக் கொண்டு இனி என்ன செய்யலாம் என்கிற அமைதியான கேள்விகள் எழ வேண்டும். விடைகளைத் தானே தீர்மானிக்க வேண்டும். தீர்மானத்திற்கு பிறகு வரும் செயல், வேதனைகளை, காரிய கஷ்டங்களை, அவமானத்தை, இடைஞ்சல்களை, கேலிகளை தாங்கும் மனோபாவம் வர வேண்டும்..

No comments:

Post a Comment

Mar 22