#தமிழகஅரசியலில்உணர்ந்தலை #today’s #poltics
அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' அறுபது வயது மேல் வாழுகின்றவர்கள் விடியும் ஒவ்வொரு நாளும் இயற்கை அளித்து தவம்…வரம் ….கொடை…. பல தோல்விகளையும் துரோகங்களையும் தொடர்ந்து பார்த்தவன் நான், கஷ்டங்களையும் கண்ணீரையும் கடந்தவன். போராடியவன் நான். ஆகவே நான் கடந்து வந்த பாதையில் உன்னால் கால் பதிக்க கூட முடியாது. எனது பாதையில் நீ பயணிக்க வேண்டும் என்றால் உனக்கு வயதும் பத்தாது அனுபவமும் பத்தாது.எனவே ஓரமாக போய் உனது பாதையை தேர்வு செய். சிலர் என் மீது போகிற போக்கில் எதையும் எளிதாக பேசலாம். நான் கடந்த வந்த பாதை , நிலை வந்தால் தங்களை தற்காத்துக் கொள்வது அவ்வளவு எளிது அல்ல. மிக கடினம். எனவே முக நூலில் men and matterயை தான்டி உன் விரும்பியபடி உனக்கு விரல் உள்ளது என மெய் அறியாமல் நாகரிகமற்ற jungle fellow மாதிரி பின்னோட்டம் இடாதே. நிலையற்ற அறிவுரைகள் கேட்பதை விட விலையற்ற ஆறுதல் வார்த்தைகளைக் தருவோம்..வாய்மையே வெல்லும்! அரசியலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டுமா? வெற்றிகரமாக உலா வர வேண்டுமா? அதற்கு சில தகுதிகள் தேவை. முதலில் கட்சி நடத்தும் குடும்ப சொந்த பந்தங்களுக்கு அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். அவர்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டும். அவர்களில் வயது குறைந்தவர்களுக்கு செருப்பு, ஷூ தூக்கக் கூட வெட்கப்படக் கூடாது. கொத்தடிமை போல நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஜாதியை மையமாக வைத்து, கட்சியை ஆரம்பிக்க வேண்டும். கட்சியை வளர்த்து, குடும்பக் கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் திறமை வேண்டும். பொது வாழ்வு களப்பணிகள், மக்கள் நல அரசியல் என்பதை மறுத்து அது எல்லாம் waste என நினைக்கும் புரோக்கர்-வியாபார- பண பயர் அரசியல்… இப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலை உள்ள இக்காலத்தில் அண்ணல் காந்தியே வந்து தேர்தலில் நின்றாலும் ஜெயிக்க முடியாது. காந்தி படம் போட்ட நோட்டுகள் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். இங்கு இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களும் சரி, பத்திரிக்கையாளர் வேஷம் போட்டு இருப்பவர்களும் சரி, யாரும் புனிதர்கள் அல்ல.!? கடந்த 1990 களில் இப்படி கேவலங்கள் நடக்க ஆரபித்து விட்டன. தரம், தகுதியற்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவர்கள் முட்டுக்கொடுப்பவர்கள் அரசியல் தொண்டரடிகள்... நண்பர்கள் என்றாலும் எமக்கு தேவையும் இல்லை. மனதளவில்… இந் நிலையில் புன்னகைக்கும் முகங்கள் யாருக்கும் வெட்கமில்லை! புதிது புதிதாக முளைக்கிறது நியாயங்கள் (அநியாயங்கள்)! இதுதான் இன்றைய நிலை! என்ன செய்ய ? #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment